பிளக் பாய்ண்ட் ரெடியா வச்சிக்கோங்க... அதிமுக ஆட்சி அமைத்த 100 நாளில் வாஷிங்மெஷின்... கடமை தவறாத கடம்பூர் ராஜூ

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Mar 19, 2021, 07:43 PM ISTUpdated : Mar 19, 2021, 07:44 PM IST
பிளக் பாய்ண்ட் ரெடியா வச்சிக்கோங்க... அதிமுக ஆட்சி அமைத்த 100 நாளில் வாஷிங்மெஷின்... கடமை தவறாத கடம்பூர் ராஜூ

சுருக்கம்

தேர்தலுக்கு பின்னர் அதிமுக அரசு ஆட்சி அமைந்த 100 நாட்களிலேயே அனைவரது வீடு தேடி வாஷிங்மெஷின் வரும் எனவே, வீடுகளில் அதற்கான பிளக் பாய்ண்ட் அமைத்து தயாராக வைத்து கொள்ளுங்கள். 

2006ம் ஆண்டு முதலே அதிமுகவின் கோட்டையாக உள்ளது கோவில்பட்டி தொகுதி. அங்கு 2011மற்றும் 2016ம் ஆண்டில் வெற்றி பெற்று, தற்போது அமைச்சராக உள்ள கடம்பூர் ராஜூ போட்டியிடுகிறார். தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வரும் அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று சத்திரப்படி, இடைசெவல் ஆகிய பகுதிகளில் திறந்த வெளி ஜீப்பில் வாக்கு சேகரித்தார். 

இடைசெவலில் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, “நாங்கள் சொல்வதை தான் செய்வோம். இதுவரை சொன்ன அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றியுள்ளோம். தமிழகத்தில் சொன்னதை செய்யக்கூடிய கட்சி அதிமுக தான். கடந்த 2006-ம் ஆண்டு தேர்தலின்போது நிலமற்ற ஏழைகளுக்கு 2 ஏக்கர் நிலம் தருவதாக கூறி தி.மு.க.வினர் ஆட்சிக்கு வந்தனர். ஆனாலும் யாருக்கும் 2 சதுர அடி நிலம் கூட வழங்கவில்லை.

தற்போதுஅதிமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படும். தேர்தலுக்கு பின்னர் அதிமுக அரசு ஆட்சி அமைந்த 100 நாட்களிலேயே அனைவரது வீடு தேடி வாஷிங்மெஷின் வரும் எனவே, வீடுகளில் அதற்கான பிளக் பாய்ண்ட் அமைத்து தயாராக வைத்து கொள்ளுங்கள். மேலும் ஆண்டுக்கு 6 சமையல் கியாஸ் சிலிண்டர்கள் இலவசமாக வீடு தேடி வந்து வழங்கப்படும். இதைப் போலவே அதிமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ல அனைத்து திட்டங்களும் நிச்சயம் செயல்படுத்தப்படும் என வாக்குறுதி அளித்தார். 
 

PREV
click me!

Recommended Stories

நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு அப்பாற்பட்டதா திமுக அரசு? விளாசும் இபிஎஸ்
100 பேர் கூட இல்லாத டாக்டர் ராமதாஸ் டெல்லி போராட்டம்..! ஒங்கும் அன்புமணி கை