செம ட்விஸ்ட்... யாரும் எதிர்பாராத விதமாக சசிகலாவிடம் ஆசிர்வாதம் வாங்கிய அமமுக வேட்பாளர்கள்..!

Published : Mar 19, 2021, 07:11 PM ISTUpdated : Mar 19, 2021, 07:21 PM IST
செம ட்விஸ்ட்... யாரும் எதிர்பாராத விதமாக சசிகலாவிடம் ஆசிர்வாதம் வாங்கிய அமமுக வேட்பாளர்கள்..!

சுருக்கம்

அரசியலிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ள சசிகலா அமமுக வேட்பாளர்கள் இருவருக்கு ஆசிர்வாதம் வழங்கி வாழ்த்து தெரிவித்துள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அரசியலிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ள சசிகலா அமமுக வேட்பாளர்கள் இருவருக்கு ஆசிர்வாதம் வழங்கி வாழ்த்து தெரிவித்துள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருந்து விடுதலையான சசிகலா சென்னை தி.நகரில் உள்ள இளவரசியின் வீட்டில் தங்கி இருந்தார். தீவிர அரசியலில் ஈடுபட போவதாக முதலில் கூறிய அவர் திடீரென யாரும் எதிர்பார்க்காத வகையில் அரசியலில் இருந்து விலகுவாக அறிவித்தார். 

இந்நிலையில், திடீரென சென்னையில் இருந்து சசிகலா காரில் தஞ்சைக்கு நேற்று முன்தினம் புறப்பட்டு சென்று அருளானந்த நகரில் உள்ள தனது கணவர் நடராசனின் வீட்டில் தங்கினார். இதனையடுத்து, தஞ்சையை அடுத்த விளார் கிராமத்தில் உள்ள அவரது குல தெய்வமான வீரனார் கோவிலுக்கு சென்று வழிப்பட்டார். அவருடன் உறவினர்கள் ஏராளமானோர் இருந்தனர். பின்னர், நடராசனின் தம்பி பழனிவேலின் பேரக்குழந்தைகளின் காதணி விழாவில் பங்கேற்றார். 

நீண்ட நாட்கள் கழித்து குடும்பத்தினர், உறவினர்கள் என பலரையும் சந்தித்தால் சசிகலா உற்சாகமாக காணப்பட்டார். அதன் பின் திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயிலுக்கு சென்று வழிபட்டார். அங்கே சுவாமி தரிசனம் செய்துவிட்டு சசிகலா வந்துக்கொண்டிருந்த போது கும்பகோணம் அமமுக வேட்பாளர் பாலமுருகன் மற்றும் ஒரத்தநாடு அமமுக வேட்பாளர் மா.சேகர் ஆகியோர் சந்தித்து ஆசி பெற்றுள்ளனர். சசிகலா அவர்களிடம் மகிழ்ச்சியாக பேசி வாழ்த்துகளை தெரிவித்ததாக அவர் கூறியுள்ளனர். 

PREV
click me!

Recommended Stories

ஸ்டாலின் ரெடியாக இருங்க.. அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்.. பிரதமர் மோடி மண்ணில் அமித்ஷா சபதம்!
ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!