கோவில்களை பக்தர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுப்போம் - ஜி.கே.வாசனின் அறிவிப்புக்கு சத்குரு வாழ்த்து

Published : Mar 19, 2021, 06:39 PM IST
கோவில்களை பக்தர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை  எடுப்போம் - ஜி.கே.வாசனின் அறிவிப்புக்கு சத்குரு வாழ்த்து

சுருக்கம்

இந்து கோவில்களை பக்தர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுப்போம்” என்று உறுதி அளித்ததற்காக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் திரு.ஜி.கே. வாசன் அவர்களுக்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை இன்று (மார்ச் 19) வெளியிட்டது. அந்த அறிக்கையில் “தமிழகத்தில் உள்ள இந்து கோவில்களை பாதுகாக்க, அதனை பக்தர்களிடமே ஒப்படைத்து, நிர்வாகம் செய்ய நடவடிக்கை எடுப்போம்” என்று குறிப்பிட்டுள்ளது. 

முக்கியத்துவம் வாய்ந்த இந்த முடிவிற்கு சத்குரு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “வாழ்த்துகள் திரு. ஜி.கே. வாசன் அவர்களே. பக்திசார்ந்த கலாச்சார வாழ்வு வாழும் தமிழ் மக்களிடம் கோவில்களை ஒப்படைப்பேன் என்று தங்களது தேர்தல் அறிக்கையில் உறுதியளித்துள்ளீர்கள். கோவில் மாநிலமான தமிழ்நாட்டின் பெருமையை நாம் மீட்டெடுப்போம். ஆசிகள் “ என்று குறிப்பிட்டுள்ளார்.

அழிந்து வரும் தமிழக கோவில்களை பாதுகாக்க அதனை அரசு பிடியில் இருந்து விடுவித்து பக்தர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சத்குரு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இதற்காக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் #கோவில்அடிமைநிறுத்து என்ற ஹாஸ் டேக்கை பயன்படுத்தி பல்வேறு தகவல்களை தினமும் பதிவிட்டு வருகிறார்.

PREV
click me!

Recommended Stories

Vijay vs Stalin: இடைத்தேர்தலை புறக்கணிக்கும் திமுக.! முன் வைத்த காலை பின் வைக்கிறதா?! மீண்டும் மேலே பறக்கும் விசில் கொடி.!
TN Assembly byelection Candidate: இடைத்தேர்தல் யுத்தம்.! விசில் சின்னத்தில் போட்டியிடும் அதிமுக முகங்கள்.! செக் மேட் யாருக்கு?