ரஜினி மாற்றிமாற்றி பேசக்கூடது எகிறி அடித்த அமைச்சர்...!! இன்னும் காட்டமா பேசியிருக்கனும் தூண்டிவிடும் எச்.ராஜா..!!

Published : Jan 21, 2020, 03:21 PM IST
ரஜினி மாற்றிமாற்றி பேசக்கூடது எகிறி அடித்த அமைச்சர்...!!   இன்னும் காட்டமா பேசியிருக்கனும் தூண்டிவிடும் எச்.ராஜா..!!

சுருக்கம்

ரஜினி எதையும் யோசித்து நிதானமாக பேச வேண்டுமென்றும் கூறிய அவர் இரண்டு விதமான கருத்துக்களை கூறக்கூடாது என்றும் தெரிவித்தார் .

பெரியார் குறித்து ரஜினிகாந்த் பேசியதற்கு அவர் மீது எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்க முடியாது எனவும்,  பெரியாரின் இந்து விரோத நடவடிக்கை குறித்து இன்னும் ரஜினி காட்டமாக பேசியிருக்க வேண்டும் என்றும் பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா கூறியுள்ளார் .  ரஜினி எப்போது அரசியலுக்கு வரப்போகிறார் என்று பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில் அவர் இந்த ஆண்டு அரசியலுக்கு வருவார் என அவரது ரசிகர்கள் அடித்து செல்லுகின்றனர் . என்னளவில் ரஜினியை சுற்றி  அரசியல் பரபரப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது . 

துக்ளக் பத்திரிகை நிகழ்ச்சியில் பேசிய ரஜினி ,  சேலத்தில் பெரியார் தலைமையில் நடந்த மாநாடு குறித்து பேசிய கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது ரஜினிக்கு எதிராக திராவிடர் கழக அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் ,  திமுகவினரும் , திராவிட சிந்தனையாளர்களும் கொந்தளித்து வருகின்றனர் .  ரஜினிக்கு எதிராக வழக்கு பதிவு செய்யவும் வலியுறுத்தி மாநிலம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில்  புகார்  கொடுத்து வருகின்றனர், இந்நிலையில்  ரஜினிக்கு ஆதரவாக பாஜகவினர் களமிறங்கியுள்ளனர் .  இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த எச். ராஜா பெரியாரின் இந்து விரோத நடவடிக்கைகள் குறித்து இன்னும் ரஜினி விரிவாக பேசியிருக்க வேண்டும் என்றார்,  

பெரியார் நடந்துகொண்டதைப் பற்றிதான்  ரஜினி கூறியிருக்கிறார் ,  உண்மையை பேசியுள்ள அவர் மீது எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்க முடியாது என எச் ராஜா தெரிவித்தார்.   இதற்கிடையே விருதுநகரில் செய்தியாளர்களை சந்தித்துள்ள அமைச்சர் கடம்பூர் ராஜு ரஜினி பேச்சு  வழக்குப்பதிவு வரை சென்றுவிட்ட நிலையில் ரஜினிதான் அதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்றார் ,  ரஜினி எதையும் யோசித்து நிதானமாக பேச வேண்டுமென்றும் கூறிய அவர் இரண்டு விதமான கருத்துக்களை கூறக்கூடாது என்றும் தெரிவித்தார் .
 

PREV
click me!

Recommended Stories

ரூ. 1,020 கோடிஊழல்..! அதிமுக ஆட்சிக்கு வந்ததும் திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் கம்பி எண்ணப் போவது உறுதி..! இபிஎஸ் சபதம்..!
நான் மட்டும் உழைத்தால் போதுமா? சாட்டையை கையில் எடுத்த ஸ்டாலின்.. திமுகவினருக்கு அதிரடி உத்தரவு!