’மு.க.ஸ்டாலின் இலவு காத்த கிளி...டி.டி.வி. வாலறுந்த நரி’ அமைச்சர் ஜெயக்குமார் நக்கல்

Published : Oct 29, 2018, 02:08 PM IST
’மு.க.ஸ்டாலின் இலவு காத்த கிளி...டி.டி.வி. வாலறுந்த நரி’ அமைச்சர் ஜெயக்குமார் நக்கல்

சுருக்கம்

எவ்வளவு சிக்கலில் இருந்தாலும் தனது நக்கல் பேச்சு குறையாது என்பதை நிரூபிக்கும் விதமாக இன்று மு.க. ஸ்டாலினை இலவு காத்த கிளி என்றும் அமமக துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனை வாலறுந்த நரி என்றும் வர்ணித்தார் அமைச்சர் ஜெயக்குமார்.

இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘ ரஜினி அரசியலுக்கு வருவதைக் கண்டு தி.மு.க.வும் அதன் தலைவர் ஸ்டாலினும்தான் பயப்பட வேண்டும். ஆனால் ரஜினியின் அரசியல் வருகை எங்களுக்கு ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாது. தி.முக.வின் ஓட்டுக்களை பிரிக்கமுடியுமே தவிர ரஜினியால் அ.தி.மு.க. ஓட்டில் ஒன்றைக்கூட பெறமுடியாது.

நெடுஞ்சாலை துறை டெண்டர் முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரிக்க இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.  தவறு நடக்காத சூழ்நிலையில் எதற்கும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. எங்கள் ஆட்சி கவிழ்ந்துவிடாதா என்று காலம்முழுவதும் காத்திருக்கப்போகிற மு.க.ஸ்டாலின் எப்போதுமே எலவு காத்த கிளிதான். இன்னொரு குறுக்கு வழியில் எங்களை கவிழ்க்க நினைக்கும் டி.டி.வி. தினகரன் ஒரு வாலறுந்த நரி.

என் மீது அவதூறான செய்திகள் பரப்பிய ஆடியோ வெளியிட்டவர்கள் என்பதை விசார்த்துவருகிறோம். அச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

PREV
click me!

Recommended Stories

தேர்தல் செலவுக்கு மண் திருடும் மாஃபியாக்கள்..! ஸ்வீட்பாக்ஸில் கொழிக்கும் அதிகாரிகள்..!
TVK தான் பெஸ்ட் சாய்ஸ்.. கூட்டாக விஜய் பக்கம் சாய்ந்த பன்னீர்செல்வம் மா.செ.கள்