'துக்ளக்' குருமூர்த்தி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை... உயர்நீதிமன்றம் அதிரடி

By manimegalai aFirst Published Oct 29, 2018, 11:52 AM IST
Highlights

ஆடிட்டரும், துக்ளக் இதழ் ஆசிரியருமான குருமூர்த்தி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர டெல்லி உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.

ஆடிட்டரும், துக்ளக் இதழ் ஆசிரியருமான குருமூர்த்தி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர டெல்லி உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.

சமூக ஆர்வலர் கவுதம் நவாஸ்கானுக்கு ஜாமீன் வழங்கியது தொடர்பாக உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதரை, துக்ளக் இதழ் ஆசிரியரும், ஆடிட்டருமான குருமூர்த்தி விமர்சித்து தனது டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

ஆடிட்டர் குருமூர்த்தியின் அந்த பதிவில், நீதிபதிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பதிவிடப்பட்டிருந்ததாகவும், உள்நோக்கத்துடன் குருமூர்த்தி மீது கருத்து தெரிவித்திருந்ததாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில்தான், டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, இந்த விவகாரம் குறித்து தானாக முன் வந்து வழக்கு பதிவு செய்தது. 

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, குருமூர்த்தி மீது உயர்நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கவும், கிரிமினல் அவதூறு வழக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

click me!