கொஞ்சம் வார்த்தையை அளந்து பேசுங்க? இல்ல வேறமாதிரி ஆகிடும்.. தேமுதிகவை எச்சரித்த அமைச்சர் ஜெயக்குமார்..!

By vinoth kumarFirst Published Mar 9, 2021, 3:29 PM IST
Highlights

அதிமுக கூட்டணியில் இருந்து விலகியதாக தேமுதிக அறிவித்த முடிவு துரதிர்ஷ்டவசமானது என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். 

அதிமுக கூட்டணியில் இருந்து விலகியதாக தேமுதிக அறிவித்த முடிவு துரதிர்ஷ்டவசமானது என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். 

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக அதிரடியாக வெளியேறியது. இதனையடுத்து, தேமுதிக துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் தேமுதிகவுக்கு இன்றுதான் தீபாவளி. தமிழகத்தில் அனைத்து இடத்திலும் அதிமுக டெபாசிட் இழக்கும். அதேபோல், விஜய பிரபாகரனும் அதிமுகவை கடுமையாக விமர்சனம் செய்தார். 

இந்நிலையில், அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியது குறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- தேமுதிக உடன் 3 சுற்றுகளாக சுமூகமான பேச்சுவார்த்தை நடைபெற்றது. அவர்களின் விலகல் முடிவு துரதிர்ஷ்டவசமானது. கூட்டணியில் இருந்து விலகுவதால் சேற்றை வாரி இறைக்க கூடாது. நாங்கள் கடைசி வரை கூட்டணி தர்மத்தை மீறவில்லை.

கூட்டணியில் இருந்து விலகிய பின்னர் கீழ்த்தரமாக பேசக்கூடாது. கீழ்த்தரமான அரசியலை தொடர்ந்தால் தேமுதிகவிற்கு எங்களால் பதிலடி கொடுக்க முடியும். தேமுதிகவிற்கு அங்கீகாரம் கொடுத்த நன்றியை மறந்துவிட்டு சுதீஷ் பேசக்கூடாது. அதிமுக தோற்கும் எனக் கூறும் சுதீஷ் ஜோசியரா? 234 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி தான் வெல்லும். தேமுதிக வார்த்தைகளை அளந்து பேச வேண்டும், இல்லையெனில் பதிலடி கொடுப்போம். இதனால் அதிமுகவிற்கு பாதிப்பு இல்லை. தேமுதிகவிற்கு தான் பாதிப்பு. கூட்டணியில் இருந்து விலகிய தேமுதிக எங்கிருந்தாலும் வாழ்க என கூறினார். 

click me!