மிஸ்டர் ஸ்டாலின், உங்க முதுகை திரும்பி பாருங்க! ஒரே அழுக்கா இருக்குது: அமைச்சர் ஜெயக்குமார் செம்ம கிண்டல் ...

By Vishnu PriyaFirst Published Nov 17, 2019, 5:13 PM IST
Highlights

மத்தியில் 13 வருடங்கள் ஆட்சியில் இருந்தும், மத்திய அரசில் அங்கம் வகித்தும், தி.மு.க.வால் தமிழகத்துக்கு எந்த பயனும் கிடைக்கவில்லை. இன்று அவர்கள் எதிப்பது போல் நடிக்கும், நீட் தேர்வை கொண்டு வந்தது தி.மு.க.வும், காங்கிரஸும்தான். அன்று தடுக்கும் இடத்தில் இருந்தம், தடுக்காமல் இருந்துவிட்டு இப்போது எங்களை குற்றம் சொல்வது வேடிக்கையாக உள்ளது. 
 

ஜெயலலிதா இறந்த பின் தங்களை விட்டுப் பிரிந்த ஓ.பன்னீர் செல்வத்தையாகட்டும், தனி கட்சி நடத்தும் தினகரனையாகட்டும், தங்களின் நிரந்தர எதிரியான தி.மு.க.வையாகட்டும், ச்சும்மா நய்யாண்டி வார்த்தைகளில் நச்! நச்! ன்னு பேசி வெளுத்தெடுப்பதில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாருக்கு நிகர் யாருமே இல்லை. திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூவெல்லாம் பேசினால் எதிர்க்கட்சியினருக்கும் சிரிப்புதான் வருமே தவிர, சீரியஸாக எதுவும் இருக்காது. ராஜேந்திர பாலாஜி பேசினால் சிரிப்பு வராது, சீரியஸாக மட்டுமே தெரியும். ஆனால், ஜெயக்குமாரால் மட்டுமே சிரிப்பு கலந்த சீரியஸ்னஸ் காட்டி பேசத்தெரியும். அந்த விதத்தில் இப்போது உள்ளாட்சி தேர்தல் விவகாரத்தை கையிலெடுத்து, தி.மு.க.வை செம்ம திட்டு திட்டியுள்ளார் மனிதர். அதிலும் ஸ்டாலினை வெளுத்தெடுத்துள்ளார் வீரியம் மிகு வார்த்தைகளில். எப்படி தெரியுமா? இப்படித்தான்...

”நாங்க உள்ளாட்சி தேர்தலுக்கு முழு தயார் நிலையில் இருக்கிறோம்.  இதோ எங்கள் கட்சியில் போட்டி போட்டுக் கொண்டு விண்ணப்பங்களை வாங்கிச் செல்கின்றனர் கட்சிக்காரர்கள். ஆனால் தி.மு.க.வோ திணறி நிற்கிறது. காரணம், மக்கள் செல்வாக்கு இல்லை. மக்கள் மத்தியில் தங்களுக்கு நல்ல பெயர் இல்லாத காரணத்தினால் உள்ளாட்சி  தேர்தலைக் கண்டு பயப்படுகிறது அக்கட்சி. ஆனாலும் விடாமல் ஸ்டாலின் எங்களை குற்றம் சொல்லிக் கொண்டே இருக்கிறார். அவர் ஒரு குற்றச்சாட்டை எங்கள் மீது சுமத்தும் போது தன் முதுகை முதலில் திரும்பிப் பார்க்க வேண்டும். மத்தியில் 13 வருடங்கள் ஆட்சியில் இருந்தும், மத்திய அரசில் அங்கம் வகித்தும், தி.மு.க.வால் தமிழகத்துக்கு எந்த பயனும் கிடைக்கவில்லை.  இன்று அவர்கள் எதிப்பது போல் நடிக்கும், நீட் தேர்வை கொண்டு வந்தது தி.மு.க.வும், காங்கிரஸும்தான். அன்று தடுக்கும் இடத்தில் இருந்தம், தடுக்காமல் இருந்துவிட்டு இப்போது எங்களை குற்றம் சொல்வது வேடிக்கையாக உள்ளது. 

நீட் வேண்டாம் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். அதற்கான நடவடிக்கைகளை அரசு நிச்சயம் எடுக்கும்.  ஆனால் அன்று வேடிக்கை பார்த்துவிட்டு, இன்று நாடகமாடுகிறது தி.மு.க. தன் முதுகில் அழுக்கை வைத்துக் கொண்டு, அடுத்தவர்களை பற்றிப் பேச கூடாது ஸ்டாலின்.
உள்ளாட்சி தேர்தலுக்கு நாங்கள் தயார், ஆனால் தி.மு.க.வுக்குதான் பீதியாகி இருக்கிறது. தேர்தல் என்றாலே அவர்களுக்கு அலர்ஜி, ஜூரம்தான். எங்களுக்கு எந்த பயமும் இல்லை. நாளையே உள்ளாட்சி தேர்தல் நடந்தாலும், உற்சாகமாக  போட்டியிட்டு உத்வேகமாக வெல்வோம்.” என்றிருக்கிறார். ஆஹாங்!

click me!