
சசிகலா குடும்பத்தை ஒதுக்கி வைத்தது..வைத்தது தான்..! அமைச்சர் ஜெயகுமார் அதிரடி..!
சசிகலா ஜெயிலிருந்து பரோலில் வெளிவரும் சூழ்நிலை உருவாகும் நிலையில், அமைச்சர் ஜெயகுமார் சசிகலா குறித்து அதிரடியாக கருத்து கூறி உள்ளார்
அதாவது, தமிழகத்தில் சசிகலா மற்றும் அவருடைய குடும்ப உறுப்பினர்கள் யாரும் எங்களுடன் சேர்க்கபடாது எனவும்,கட்சியை பொறுத்தவரை அவர்களை எப்பொழுதோ ஒதுக்கி வைத்தது வைத்தது தான்...இதில் எந்த மாற்றமும் இல்லை என அமைச்சர் ஜெயகுமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.,
சசிகலாவின் கணவர் நடராஜ் உடல்நிலை மோசமாக உள்ளதாக பரோலில் வெளிவர உள்ள சசிகலாவின் வருகையால் ஏதாவது மீண்டும் குளறுபடி ஏற்படுமா என்ற சந்தேகம் எழுந்து வரும் நிலையில், பரோலில் வெளிவருவதற்கு முன்பாகவே அமைச்சர் ஜெயகுமார் இது போன்று தெரிவித்துள்ளார்
மேலும் சசிகலாவை சில அமைச்சர்கள் நேரில் சென்று பார்க்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இவை அனைத்தும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையை மேலும் பரபரப்பாக்கி உள்ளது என்றே கூறலாம்