பிகில் திகில் அனைவருக்கும் சட்டம் ஒன்றுதான்...!! அதிரடி காட்டியது தமிழக அரசு...!!

By Ezhilarasan BabuFirst Published Oct 23, 2019, 4:50 PM IST
Highlights

யார் வேண்டுமானாலும் படம் எடுத்து வெளியிடலாம் என்ற அவர்  சிறப்பு கட்சிகள் என்ற பெயரில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர் என்றார், இதனால் பிகில் படத்தின் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி மறுத்து அமைச்சர் உத்தரவிட்டிருக்கிறார் என்றார் . பிகில், திகில் யாராக இருந்தாலும் அனைவருக்கும் சட்டம் பொதுவானதுதான் என்றார். 

முரசொலி அலுவலகம் மற்றும் அண்ணா அறிவாலயம் பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டிருந்தால் அரசு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்,  திமுக அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் இது குறித்து தெளிவுபடுத்த வேண்டும் என்றும் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதையும் படிங்க: அடிதூள்... தமிழகத்தில் புதிய அணைகள் கட்ட 1200 கோடி...!! தமிழக அரசு அதிரடி..!!

தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வரும் நிலையில் இயற்கை சீற்ற பாதிப்புகளில் இருந்து மீனவர்களை பாதுகாக்க ஆபத்து காலங்களில் அவர்களுக்கு உதவும் வகையில் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள மீன்வளத் துறை தலைமை அலுவலகத்தில் கட்டுப் பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இதனை மீன்வளத்துறை  அமைச்சர் ஜெயக்குமார் திறந்து வைத்தார். மேலும் மீனவர்களுக்கு மானிய விலையில் பைபர் படகுகள் இன்ஜின் உள்ளிட்ட மீன்பிடி சாதனங்களை வழங்கினார்.  தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார்,  கடந்த காலங்களில் தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகளால் ஒக்கி போன்ற புயல் காலங்களில் மீனவர்களின் உயிர்சேதம் ஏற்படாமல் தடுக்கப்பட்டது  என்றார். 

இதையும் படிங்க: அந்தமானை அதிரவைத்த பிரம்மோஸ் ஏவுகணை சோதனை..!! உச்சகட்ட பீதியில் பாகிஸ்தான்..!!

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் மீன்வளத்துறையில் புதிய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன  இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் மீனவர்களுக்கு சாட்டிலைட் ஃபோன்கள் வழங்கப்படுகின்றன. 200 நாட்டிக்கல் மைல் வரை இந்த  ஃபோனை பயன்படுத்த முடியும் என்றார்.  ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் படம் எடுத்து வெளியிடலாம் என்ற அவர்  சிறப்பு கட்சிகள் என்ற பெயரில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர் என்றார், இதனால் பிகில் படத்தின் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி மறுத்து அமைச்சர் உத்தரவிட்டிருக்கிறார் என்றார் . பிகில், திகில் யாராக இருந்தாலும் அனைவருக்கும் சட்டம் பொதுவானதுதான் என்றார்.  அவர் 

விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் அதிக அளவிலான வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெறும். கருத்துக்கணிப்பில் எங்களுக்கு நம்பிக்கையில்லை.  இடைத்தேர்தல் மட்டுமல்லாது உள்ளாட்சித் தேர்தல் 2021 சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக தான் வெற்றி பெறும் என்றார்.
 

click me!