
எந்தவொரு
சென்னை, பட்டினப்பாக்கத்தில், அமைச்சர் ஜெயக்குமர், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தை வழிநடத்திய மாபெரும் தலைவர் ஜெயலலிதா உருவ படத்தை சபாநாயகர் திறந்து வைத்ததில் எந்த தவறும் இல்லை. ஜெயலலிதாவின் சிறப்பை போற்றும் வகையில் அவரது நினைவு மண்டபம், நினைவில்லம் திறப்பு விழா விரைவில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.
ஜெயலலிதா நினைவு மண்டபம் உள்ளிட்ட எந்தவொரு நிகழ்வுக்கும் பிரதமரை அழைத்தால், பாஜகவுடன் கூட்டணி என்றும், பாஜகவின் பினாமி அர என்றும் சிலர் விமர்சிப்பார்கள். அதிமுகவின் செயல்பாடுகளுக்கு களங்கம் கற்பிப்பார்கள். அழைக்காவிட்டால் ஏன் அழைக்கவில்லை என்ற கருத்தும் வரும். எப்படி செய்தாலும் விமர்சிப்பவர்கள் தொடர்ந்து ஏதாவது சொல்லி வருவார்கள். கிடப்பது கிடக்கட்டும் என்று எங்கள் பாதையில் நாங்கள் பயணித்து வருகிறோம்.
ஜெயலலிதாவின் பிறந்தநாள் வரும் 24 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. எல்லோரும் முன்கூட்டியே திட்டமிட்ட நிகழ்ச்சிகளில் பரபரப்பாக பணியாற்றி கொண்டிருப்பதால், ஜெயலலிதாவின் உருவ படத்தை திறந்து வைத்தோம். இதை புரிந்து கொள்ளாமல், சிலர் விமர்சனங்களை முன் வைக்கிறார்கள் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.