அதிமுக ஆட்சியை கலைக்க முடியாத விரக்தியில் மு.க.ஸ்டாலின் உளறுகிறார்... அமைச்சர் ஜெயக்குமார் தாக்கு..!

By vinoth kumarFirst Published Apr 12, 2020, 6:57 PM IST
Highlights

சட்டப்பேரவைக்கு வந்தால் கொரோனா பரவும், வெளியே சென்றால் கொரோனா பரவாது, இது தான் மு.க.ஸ்டாலினின் பாணி என விமர்சித்தார். மேலும், கொரோனா நோய்த் தொற்று பரவ திமுகதான் காரணமாக இருந்துள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டினார். மைக்ரோஸ்கோப் மூலம் பார்த்தால் கூட அதிமுக அரசியலில் எந்த குறையும் காண முடியாது. அதிமுக அரசை மக்கள் பாராட்டும் நிலையில், அதை மு.க.ஸ்டாலினால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

அதிமுக அரசை கலைக்க எவ்வளவோ முயன்றும் முடியாமல் போன  நிலையில் தற்போது உளறிக்கொண்டிருக்கிறார் என அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.  

கொரோனா வைரஸ் பரவலுக்கு அதிமுக அரசு முறையான நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறிய மு.க.ஸ்டாலினின் கடிதத்துக்கு பதிலளித்து அறிக்கை வெளியிட்டுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சீனாவில் நோய்த் தொற்று இருப்பதை அறிந்தவுடன், ஜனவரி மாதத்திலேயே கொரோனா பரிசோதனைக் கருவிகள், உடல் கவச உடைகள், மருந்துகள் உள்ளிட்டவற்றை கொள்முதல் செய்ய தமிழக அரசு ஆணை வழங்கியதாக தெரிவித்துள்ளார். இதற்கு மு.க.ஸ்டாலின் தரப்பில் சந்தர்ப்பவாதம் பற்றி பேச உங்களுக்கு தகுதியே இல்லை என்றார். 

இந்நிலையில், சென்னையில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளிக்கையில்;- சட்டப்பேரவைக்கு வந்தால் கொரோனா பரவும், வெளியே சென்றால் கொரோனா பரவாது, இது தான் மு.க.ஸ்டாலினின் பாணி என விமர்சித்தார். மேலும், கொரோனா நோய்த் தொற்று பரவ திமுகதான் காரணமாக இருந்துள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டினார். மைக்ரோஸ்கோப் மூலம் பார்த்தால் கூட அதிமுக அரசியலில் எந்த குறையும் காண முடியாது. அதிமுக அரசை மக்கள் பாராட்டும் நிலையில், அதை மு.க.ஸ்டாலினால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

 தமிழக தலைமைச் செயலாளர் எல்லாத்துறைகளிலும் சம்பந்தப்பட்டவர் என்பதால்தான் அவர் பேட்டியளித்தார். தமிழக அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்த பிறகு தான் மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்திருந்தது என்றார்.  கொரோனா பரவலை தடுக்க சிறப்பு குழுக்களை அமைத்து, தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் 7 முறை ஆலோசனை நடத்தியுள்ளார். அதிமுக அரசை கலைக்க எவ்வளவோ முயன்றும் முடியாமல் போன  நிலையில் தற்போது உளறிக்கொண்டிருக்கிறார் என விமர்சனம் செய்துள்ளார். 

click me!