
ஊழலில் திளைத்த திமுகவுக்கு முதல்வர் பழனிசாமி தலைமையிலான ஆட்சியை விமர்சிக்க எந்த தகுதியும் கிடையாது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு டெங்கு காய்ச்சலைத் தடுக்க முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. தமிழக அரசே டெங்கு அரசுதான் என திமுக செயல் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் விமர்சித்திருந்தார்.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், டெங்குவைக் கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் எனவே டெங்குவைத் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்ற ஸ்டாலினின் குற்றச்சாட்டை ஏற்க முடியாது எனவும் தெரிவித்தார்.
ஊழலில் திளைத்த திமுகவிற்கு தமிழக அரசை விமர்சிக்கும் தகுதி கிடையாது எனவும் கடுமையாக சாடினார்.