உண்ட வீட்டுக்கே ரெண்டகமா? சசிகலாவுக்கு சப்போர்ட் செய்த கோகுல இந்திராவை வறுத்தெடுத்த ஜெயக்குமார்...!

By vinoth kumarFirst Published Jan 14, 2021, 2:51 PM IST
Highlights

சசிகலாவுக்கு ஆதரவாக பேசிய முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவுக்கு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். 

சசிகலாவுக்கு ஆதரவாக பேசிய முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவுக்கு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். 

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சசிகலாவை தவறாக பேசியதாக கூறி, அவரை கண்டித்து அதிமுக சார்பில் சென்னையில் நேற்று முன்தினம் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக முன்னாள் அமைச்சரான கோகுல இந்திரா பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது;- மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுடன் இணைந்து தவ வாழ்க்கை வாழ்ந்தவர்.

அதிமுகவின் தலைவராக இருந்த அவர், எங்கிருந்தாலும் நாங்கள் மரியாதையுடன் போற்றக்கூடியவர். அவரை யார் எங்கிருந்து அவமரியாதையாக பேசினாலும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது" என்று கோகுல இந்திரா சென்டிமென்ட்டாக பேசினார் இவரது பேச்சு அதிமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இவரது பேச்சுக்கு முன்னாள் எம்.பி.அருண்மொழிதேவன் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், சென்னையில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- கட்சியில் இருந்துகொண்டு சசிகலாவுக்கு ஆதரவாக பேசக்கூடாது. கட்சிக்கு விசுவாசமாக இருக்க வேண்டும். ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என்பதை ஒருபோதும் ஏற்க முடியாது. சசிகலா வருகை அரசியலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றார். 

அதேபோல், ராஜேந்திர பாலாஜி தெளிவில்லாமல் இருக்கிறார். அமமுகவினருடன் நமக்கு எந்த உறவும் கிடையாது. இரட்டை இலை சின்னத்தை எதிர்த்து நின்ற அமமுகவினர் நமக்கு தம்பியா? என கேள்வி எழுப்பியுள்ளார். அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசுவதை எல்லாம் கட்சி தலைமை பார்த்துகொண்டு தான் இருக்கிறது என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

click me!