வரும் 19ஆம் தேதியுடன் தென் மாவட்டங்களில மழை ஓயும்.. அடுத்த 24 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் கன மழை.

By Ezhilarasan BabuFirst Published Jan 14, 2021, 1:58 PM IST
Highlights

வடகிழக்கு பருவமழையானது தென் மாநிலங்களில் இருந்து வருகின்ற 19ஆம் தேதி விலகுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகிறது என சென்னை வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது


வடகிழக்கு பருவமழையானது தென் மாநிலங்களில் இருந்து வருகின்ற 19ஆம் தேதி விலகுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகிறது என சென்னை வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது. மேலும், மாலத்தீவு பகுதியை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த  24 மணி நேரத்திற்கு ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் தூத்துக்குடி  மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும், தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

15-1-2021 தென் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், 16-1-2019 தமிழகம் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். 17-1-2021, 18-1-2021 தமிழகம் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொருத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 24 டிகிரி செல்சியஸையும் ஒட்டியிருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஒரு சில இடங்களில் கன முதல் மிக கன மழையும் பதிவாகியுள்ளது. 

அதிகபட்சமாக பாபநாசம் (திருநெல்வேலி) 18 சென்டி மீட்டர் மழையும், மணிமுத்தாறு (திருநெல்வேலி) 16 சென்டி மீட்டர் மழையும், தூத்துக்குடி 11 சென்டி மீட்டர் மழையும், அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி) 9 சென்டிமீட்டர் மறையும் கடலாடி (ராமநாதபுரம்) திருமயம் (புதுக்கோட்டை) தல 8 சென்டி மீட்டர் மழையும் ஒட்டப்பிடாரம் (தூத்துக்குடி) பிளவக்கல் (விருதுநகர்) தென்காசி (தென்காசி) அரிமளம் (புதுக்கோட்டை) வலிநோக்கம் (ராமநாதபுரம்)  தலா 7 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது. ஜனவரி 14 லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் மேற்கூறிய பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப் படுகிறார்கள் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
 

click me!