பூம் பூம் மாடு மீது திடீர் பாசம்... உச்சந்தலையில் முத்தம் வாங்கிய அமைச்சர் ஜெயக்குமார்..!

By vinoth kumarFirst Published Oct 8, 2019, 11:15 AM IST
Highlights

பூம் பூம் மாட்டுக்காரன் தெருவில் வந்தாண்டி, டும் டும் மேளந்தட்டி சேதி சொன்னான்டி.. என்பது அந்தக்கால இளசுகளின் ரிங்டோன். இன்றோ, நமது பண்பாட்டு கூறுகளை, பாரம்பரிய அம்சங்களை கேலியாக பார்க்கும் மனோபாவம் நிறைய பேரிடம் உள்ளது. ஆனால், பல ஆண்டுகளுக்குப் பிறகு பூம் பூம் மாட்டுக்காரர் ஒருவரை நேரில் பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

சென்னையில் அமைச்சர் ஜெயக்குமார், பூம் பூம் மாடு ஆசீர்வதித்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சென்னை பட்டினப்பாக்கத்தில் அமைச்சர் ஜெயக்குமாரின் வீடு அமைந்நதுள்ளது. தினமும் காலையில் நடைபயிற்சி செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில், வழக்கம் போல நடைபயிற்சி மேற்கொண்டிருந்த போது அவரது வீடு அமைந்துள்ள வீதியில் பூம் பூம் மாட்டுக்காரர் சென்று கொண்டிருந்தார். இதைக் கண்ட அமைச்சர் ஜெயக்குமார் அருகில் சென்று பூம் பூம் மாட்டிடம் ஆசி பெற்றார்.

இது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், பூம் பூம் மாட்டுக்காரன் தெருவில் வந்தாண்டி, டும் டும் மேளந்தட்டி சேதி சொன்னான்டி.. என்பது அந்தக்கால இளசுகளின் ரிங்டோன். இன்றோ, நமது பண்பாட்டு கூறுகளை, பாரம்பரிய அம்சங்களை கேலியாக பார்க்கும் மனோபாவம் நிறைய பேரிடம் உள்ளது. ஆனால், பல ஆண்டுகளுக்குப் பிறகு பூம் பூம் மாட்டுக்காரர் ஒருவரை நேரில் பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. மாட்டின் தலையசைப்பும், பூம் பூம் மாட்டுக்காரரின் பேச்சும் என்னுள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தோண்டி எடுத்து கீழடி நாகரீகம் என்று பெருமைப்பட்டுக் கொள்ளும் அதேவேளையில், நாம் இத்தகைய பூம் பூம் மாட்டுக்காரன் போன்றவர்களை மறந்து விடக்கூடாது. இவர்களை காப்பதும் ஒன்றுதான், நமது நாகரீகத்தை காப்பதும் ஒன்றுதான்.

click me!