டீல் பெரம்பூர்! சிந்து மேட்டரில் வெற்றிவேல் சைலன்டானதன் பின்னணி!

By vinoth kumarFirst Published Nov 17, 2018, 10:36 AM IST
Highlights

அமைச்சர் ஜெயக்குமார் தொடர்பான அந்தரங்க விஷயங்கள் குறித்து இனி பேச வேண்டாம் என்றும் அதற்கு பிரதிபலனாக பெரம்பூர் தொகுதியில் வெற்றிவேல் போட்டியிடும் போது அ.தி.மு.க தரப்பில் பெரிய அளவில் எதிர்ப்பு இருக்காது என்றும் உறுதி அளிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

சிந்து மேட்டரில் திடீரென வெற்றிவேல் சைலன்ட் ஆனதன் பின்னணி குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை துறைமுகம் பகுதியை சேர்ந்த சிந்து என்கிற  பெண்ணை அமைச்சர் ஜெயக்குமார் ஏமாற்றிவிட்டதாக பகிரங்க பேட்டி கொடுத்து பரபரப்பாக்கியவர் பெரம்பூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏவான வெற்றிவேல். அமைச்சர் ஜெயக்குமார் வரம்பு மீறியதால் சிந்துவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாகவும் அந்த குழந்தைக்கு ஜெயக்குமார் தனது சொத்தை பிரித்து கொடுக்க வேண்டும் என்றும் அதிரடி கிளப்பியிருந்தார் வெற்றிவேல்.

 

இந்த நிலையில் கடந்த வாரம் வெற்றிவேல் குறிப்பிட்டு பேசிய சிந்து என்கிற பெண் பற்றியும் அவரது தாயார் பற்றியும் பரபரப்பு தகவல்கள் வெளியாகின. சிந்துவும், அவரது தாயாரும் ஆண்களை அதுவும் குறிப்பாக பாதிரியார்களை குறி வைத்து மோசடி செய்பவர்கள் என்பதற்கான ஆதாரம் வெளியிடப்பட்டன. மேலும் பாதிரியார்களுடன் நெருங்கி பழகிவிட்டு பின்னர் அவர்களிடம் பணம் கேட்டு மிரட்டி சிந்துவின் தாயார் மீது எக்குத்தப்பான வழக்குகள் இருப்பதும், சிந்துவும் இப்படியான புகார்களில் சிக்கி காவல் நிலையம் சென்று வந்ததும் தெரியவந்தது. 

இந்த ஆதாரங்கள் வெளியான நிலையில் மறுநாள் முன்னாள் எம்.எல்.ஏ வெற்றிவேல் ஏதாவது பேட்டி கொடுப்பார், ஜெயக்குமாருக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் ஏதேனும் நடவடிக்கை எடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கிணற்றில் போட்ட கல் போன்று வெற்றிவேல் தரப்பு சைலன்டானது. இது குறித்து விசாரித்த போது தான் அமைச்சர் ஜெயக்குமார் தரப்பு வெற்றிவேலுடன் சமாதானம் பேசி முடித்த தகவல் வெளியாகியுள்ளது.

  

வட சென்னையில் ஒரே கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த இருவருக்கும் நெருக்கமான ஒரு நண்பர் மூலம் டீல் முடிந்ததாக சொல்லப்படுகிறது. அமைச்சர் ஜெயக்குமார் தொடர்பான அந்தரங்க விஷயங்கள் குறித்து இனி பேச வேண்டாம் என்றும் அதற்கு பிரதிபலனாக பெரம்பூர் தொகுதியில் வெற்றிவேல் போட்டியிடும் போது அ.தி.மு.க தரப்பில் பெரிய அளவில் எதிர்ப்பு இருக்காது என்றும் உறுதி அளிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

 

மேலும் அமைச்சர் ஜெயக்குமாரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து வெற்றிவேல் கொடுத்த பேட்டியை அவரது ஆதரவாளர்களே கூட ரசிக்கவில்லையாம். அரசியலில் இதெல்லாம் சாதாரணம் என்கிற போது அமைச்சர் ஜெயக்குமாரும் நம் பக்கம் இதே போல் பிரச்சனைகளை தோன்டினால் என்ன ஆவது என்று பலரும் விக்கி நின்றுள்ளனர். இதனால் தான் ஜெயக்குமார் தரப்பில் இருந்து அணுகியதும் சட்டென்று வெற்றிவேல் சரண்டர் ஆகி வெள்ளைக் கொடி காட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

click me!