அமைச்சர் ஜெயக்குமாரின் வெறித்தனம்! வெறித்தனம்!:

By Vishnu PriyaFirst Published Jan 18, 2020, 5:52 PM IST
Highlights

ஜாதி, மதம், இனம், மொழியை கடந்தவர் திருவள்ளுவர். அ.தி.மு.க.வின் நிலைப்பாடு அதுதான். ஜாதி வெறி, இன வெறி, மதவெறி உடையவர்கள் திருக்குறளைப் படித்தால் அந்த வெறித்தனங்கள் போய்விடும். -  ஜெயக்குமார் (மீன் வளத்துறை அமைச்சர்)

*    ஜெயலலிதாவின் ஆவி மிக உக்கிரமாக இருக்கிறது. அமைச்சர்கள், அதிகாரிகள் மந்திரக்கட்டுகள் மூலம் தப்பித்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் இந்த ஆண்டின் முடிவில் சில அமைச்சர்களின் நிலை படு மோசமாக மாறும். இப்போதே பல அமைச்சர்களின் குடும்பத்தில் நிம்மதி இல்லை. 
-    வேங்கட சர்மா (ஆவிகளுடன் பேசுபவர்)

*    இந்திய மருத்துவ தொழில் நடத்தை விதிகளின்படி, மருந்து நிறுவனங்களிடமிருந்து டாக்டர்கள் அன்பளிப்பு மற்றும் லஞ்சம் வாங்கினால் அவர்கள் டாக்டர் தொழில் செய்ய மூன்று மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை தடை விதிக்க முடியும். ஆனால் இந்த விதி மீறப்படுவது சர்வ சாதாரணமாக நடக்கிறது. 
-    சவுந்தர்ராஜன் (தலைவர் - சமூக அரசியல் சட்ட விழிப்புணர்வு அமைப்பு)

*    துணிக்கடை விளம்பரம் போல், ‘எங்களின் அப்ளிகேஷனை மொபைலில் டவுன்லோடு பண்ணி பயன்படுத்தினால், உங்களுக்கு ஒரிஜினல் கொஸ்டீன் பேப்பர்களை தேர்வுக்கு இரு நாட்கள் முன்னாடியே போட்டுவிடுகிறோம். இதுவரையில் நாங்கள் லீக் செய்த எந்த  கொஸ்டீன் பேப்பரும் மாறியதில்லை.’ அப்படின்னு விளம்பரம் பண்ணி, தேர்வு வினாத்தாளை  அவுட் பண்றாங்க சில மொபைல் ஆப் கம்பெனிகள்
-    ராஜ்குமார் (கலை ஆசிரியர் நல சங்க மாநில தலைவர்)

*    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஒரு கோமாளி. ஈரான் மக்களை ஆதரிப்பது போல் நம்ப வைத்து, அவர் துரோகம் இழைத்துவிடுவார். ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிரான சண்டையில்,  திறமை வாய்ந்த ஈரான் ராணுவ தளபதியை, கோழைத்தனமாக அமெரிக்க சுட்டு வீழ்த்தியது. 
-    அலி கொமேனி (ஈரான் தலைமை நிர்வாகி)

*    பயங்கரவாதிகளுக்கு உதவியதாக கைது செய்யப்பட்ட, டி.எஸ்.பி., தேவிந்தர் சிங் குறித்து, மத்திய அரசு தரப்பில் இருந்து  யாரும் வாய் திறக்க மறுப்பது ஏன்? இந்த வழக்கை ஒன்றுமில்லாமல் செய்ய வேண்டுமானால், தேசிய புலனாய்வு அமைப்பின் தலைவரான ஒய்.சி.மோடியிடம் இதன் விசாரணையை ஒப்படைத்தால் போதும். 
-    ராகுல் காந்தி (காங்கிரஸ் முன்னாள் தலைவர்)

*    குடியுரிமை சட்டத்தை எதிர்த்து அசாமில் முஸ்லிம்கள் போராட்டம் நடத்துவது உண்மைதான். ஆனால் இந்த போராட்டங்களில் பெரும்பாலும் பங்கேற்றுள்ளது அசாமில் வசிக்கும் ஹிந்துக்கள் தான். இதனை பா.ஜ. தலைவர்கள் உணர வேண்டும். 
-    தருண் கோகாய் (அசாம் முன்னாள் முதல்வர்)

*    ஸ்டாலின் தான் தமிழகத்தின் முதல்வராக வேண்டும் என காங்கிரஸ் வேலை பார்க்கிறது. ஆனால் தி.மு.க.வில் உள்ள சிலரோ, ஸ்டாலின் முதல்வராக கூடாது என்ற எண்ணத்தில் உள்ளனர் என்பது இப்போது தெரிய வந்திருக்கிறது. தி.மு.க. தலைவருக்கு எதிராக அவரது கட்சியிலேயே ஒரு கூட்டம் உள்ளது. 
-    மாணிக் தாகூர் (காங்கிரஸ் எம்.பி.)

*    தமிழகத்தில் ஜல்லிக்கட்டு  போட்டி உரிமையை மீட்டெடுத்தது எங்கள் கட்சிதான். ஜல்லிக்கட்டு போட்டி மீண்டும் நடப்பதால், தமிழர்களின் வீரத்தையும், கலாசாரத்தையும்  எங்கள் அரசு  பாதுகாத்துள்ளது. எனவே இப்போட்டிகள் விமரிசையாக நடக்கும், அலங்காநல்லூர் அல்லது பாலமேட்டில் நினைவுத்தூண் அமைக்கப்படும். 
-    ஆர்.பி.உதயகுமார் (வருவாய்துறை அமைச்சர்)

*    தி.மு.க.வும், காங்கிரஸும் பழசை மறக்க வேண்டும். இரு கட்சிகளும் இணைந்திருந்தால் தான் கூட்டணிக்கு நல்லது. எனவே இரு கட்சிகளின் தலைவர்களும் அமர்ந்து பேசி சுமூக முடிவு காண வேண்டும். 2021 சட்டசபை தேர்தலுக்கு இரு கட்சிகளும் தயாராக வேண்டும். 
-    திருநாவுக்கரசர் (மாஜி காங்கிரஸ் தலைவர்)

*    ஜாதி, மதம், இனம், மொழியை கடந்தவர் திருவள்ளுவர். அ.தி.மு.க.வின் நிலைப்பாடு அதுதான். ஜாதி வெறி, இன வெறி, மதவெறி உடையவர்கள் திருக்குறளைப் படித்தால் அந்த வெறித்தனங்கள் போய்விடும். 
-    ஜெயக்குமார் (மீன் வளத்துறை அமைச்சர்)

*    சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் பல முறைகேடுகள் நடந்தன. ஆனாலும் அதையெல்லாம் தாண்டி தி.மு.க. பெரும் வெற்றி பெற்றுள்ளது. இந்த தேர்தல் முறையாக நடந்திருந்தால் நூறு சதவீதம் நாங்கள் வென்றிருப்போம். 
-    மு.க. ஸ்டாலின் (தி.மு.க. தலைவர்)

click me!