
செல்போனுடன் தொலைபேசி ரிசீவரை இணைத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்.
கடந்த 15ம் தேதி தேதி தொடங்கி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்றுவருகிறது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குறித்து அவதூறாக பேசியதற்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி காங்கிரஸ் எம்பிக்கள் நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருவதால் அவை நடவடிக்கைகள் முற்றிலுமாக முடங்கியுள்ளன.
இந்நிலையில், இன்றைய கூட்டத்திற்கு நாடாளுமன்றத்திற்கு வந்த மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், தனது செல்போனுடன் தொலைபேசி ரிசீவரை இணைத்திருந்தார்.
இதைக் கண்டு அங்கிருந்த அனைவரும் வியந்து பார்த்தனர். செல்போனில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சிலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்வதற்காக ரிசீவரை இணைத்துள்ளதாக அமைச்சர் ஜவடேகர் தெரிவித்தார்.
செல்போனுடன் ரிசீவரை இணைத்து அமைச்சர் வைத்திருந்த புகைப்படமும் வீடியோவும் வைரலாகிக் கொண்டிருக்கிறது.