கிருஷ்ணப்பிரியாவுக்கு அரசியல் பக்குவம் பத்தல...! அட்வைஸ் பண்ணும் டிடிவி தினகரன்..! 

 
Published : Dec 22, 2017, 02:57 PM ISTUpdated : Sep 19, 2018, 01:43 AM IST
கிருஷ்ணப்பிரியாவுக்கு அரசியல் பக்குவம் பத்தல...! அட்வைஸ் பண்ணும் டிடிவி தினகரன்..! 

சுருக்கம்

Krishnapriyas speech on the release of Jayalalithaa was politically immature

ஜெயலலிதா வீடியோ  வெளியானது குறித்து கிருஷ்ணபிரியா பேச்சு அரசியல் முதிர்ச்சியற்றது எனவும் பக்குவமில்லாமல் பேசி வருகிறார் எனவும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

தமிழக முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது எடுத்த வீடியோ என்று டிடிவி தினகரனின் ஆதரவாளர் வெற்றிவேல் வெளியிட்டார். இது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த வீடியோ குறித்து பல்வேறு தரப்பினர் சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர். ஆர்.கே.நகர் தேர்தலை வைத்தே இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளதாகவும் குற்றம் கூறப்பட்டு வந்தது.

இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியா, தற்போது வெளியான ஜெ. வீடியோவை, முதலில் கொடுக்க சொன்னதே நாங்கள்தான் என்று கூறியிருந்தார். மேலும் நாங்கள் கூறும்போது அதனை வெளியிடாமல், இப்போது அதனை வெளியிடுவது கீழ்த்தரமான செயல் என்றும் கிருஷ்ணபிரியா கூறியிருந்தார். 

இது தொடர்பாக டிடிவி தினகரன் பேசும்போது, ஜெயலலிதா சம்பந்தப்பட்ட வீடியோவை, கிருஷ்ணபிரியாவிடம் இருந்து வாங்கவில்லை என்று கூறியிருந்தார். 

இதற்கு பதிலளித்த கிருஷ்ணப்பிரியா வீடியோவை கொடுத்தது நாங்கள்தான் என்று கூறினேனே தவிர நான் என்று கூறவில்லை என்றார். என் கையில் இருந்து வாங்கினார் என்று நான் கூறவேயில்லை. வேண்டுமானால் ஊடகத்தில் பதிவு செய்ததை மீண்டும் பார்த்துக்கொள்ளலாம் என்றும் தெரிவித்தார். 

இது குறித்து மதுரையில் பேட்டி அளித்த டிடிவி தினகரன்ஜெயலலிதா வீடியோ  வெளியானது குறித்து கிருஷ்ணபிரியா பேச்சு அரசியல் முதிர்ச்சியற்றது எனவும் பக்குவமில்லாமல் பேசி வருகிறார் எனவும் தெரிவித்தார். 

PREV
click me!

Recommended Stories

ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!
நாளையே திமுக என்னை தூக்கிப்போட்டாலும் கவலையில்லை..! மதுரையில் 'கெத்து' காட்டிய திருமாவளவன்!