ரஜினி மற்றும் கமலை யாருமே எதிர்பார்க்காத வகையில் பொடனியில் அடித்த பொல்லாத அமைச்சர்!

By Vishnu PriyaFirst Published Nov 22, 2019, 6:23 PM IST
Highlights

*    திருவள்ளுவர், அண்டாள், காரைக்கால் அம்மையார் உள்ளிட்டோரை இழிவாக பேசியுள்ளனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. மக்களிடத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தும் என தெரிந்தே இதை செய்கின்றனர். கலவரம் ஏற்பட்டு நாட்டில் அமைதியற்ற சூழல் ஏற்படும். இதை தவிர்க்க நடவடிக்கை அவசியம்!
 

*    திருவள்ளுவர், அண்டாள், காரைக்கால் அம்மையார் உள்ளிட்டோரை இழிவாக பேசியுள்ளனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. மக்களிடத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தும் என தெரிந்தே இதை செய்கின்றனர். கலவரம் ஏற்பட்டு நாட்டில் அமைதியற்ற சூழல் ஏற்படும். இதை தவிர்க்க நடவடிக்கை அவசியம்!
-    பேரூர் ஆதினம் மருதாசல அடிகளார்

*    முதல்வர் பற்றிக் கருத்துச் சொல்ல நடிகர் ரஜினிக்கு உரிமை உண்டு. அவர், தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதற்காக அ.தி.மு.க. இவ்வளவு ஆத்திரப்பட வேண்டாம். புதுவையில் கருணாநிதியின் சிலை அமைக்க அம்மாநில அமைச்சரவை முடிவெடுத்துள்ளது. அதற்கு, நிலம் தர மாட்டேன்! என கவர்னர் கிரண்பேடி கூறுவதற்கு எந்த உரிமையும் இல்லை.
-    கே.எஸ்.அழகிரி

*    ரஜினி, கமல் அரியணை ஏற வேண்டும் என நினைப்பதில் தவறில்லை. அதற்காக மக்களை சந்தித்து, அவர்களின் கொள்கை, லட்சியத்தை விளக்குவதால் யாருக்கும் பிரச்னை இல்லை. ஆனால் மக்களுக்காக செயல்படும் அரசு மற்றும் கட்சி மீது கல் வீசினால், அது அவர்களைத் தான் காயப்படுத்தும். பந்தை அவர்கள் எங்கள் மீது வீசினால், நாங்கள் அவர்கள் மீது வீசுவோம்.
-    ஜெயக்குமார். 

*    ஈ.வெ.ரா  மற்றும் எங்கள் கொள்கைகள் மீது, சங் பரிவார் சக்திகளால் குறிவைத்து நிகழ்த்தப்படும் தாக்குதல்களை, வன்மையாக கண்டிக்கிறேன். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ஈ.வெ.ரா. போராடினார். பெண் உரிமைக்காக குரல் கொடுத்தார், ஜாதி முறைகளுக்கு எதிராக பேசினார். 
-    மு.க.ஸ்டாலின்

*    நடிகர் ரஜினியால் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க முடியாது. அவரின் பாட்ஷா படம் வெளியானபோது அவர் கட்சியை துவக்கியிருந்தால், ஆட்சியை பிடித்திருப்பார். அரசியல் கட்சி துவக்க ரொம்ப தாமதம் செய்துவிட்டார். இனிமேல் அவரால் வெற்றி பெற முடியாது. அவரது ரசிகர் மன்ற நிர்வாகிகளும் வயதானவர்களாகி விட்டனர். 
-    ராஜேந்திர பாலாஜி

*    அரசு முறை பயணமாக 10 நாட்கள் அமெரிக்கா சென்றிருந்தேன். தமிழகத்தில் தொழில் துவங்க வருமாறு அங்குள்ள தொழிலதிபர்களை சந்தித்து அழைப்பு விடுத்தேன். தமிழகத்தில் தொழில் துவங்க அமெரிக்கர்கள் ஆர்வமாக உள்ளனர். இன்னும் ஒரு மாத காலத்திற்குள் அவர்கள் தமிழகத்தில் தொழில் துவங்குவர். 
-    ஓ.பன்னீர்செல்வம். 

*    தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது என சிலர் கூறுகின்றனர். அவ்வாறு எந்த வெற்றிடமும் இல்லை. எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன் மறைந்த பின் தமிழ் சினிமாவில்தான் வெற்றிடம் நிலவுகிறது. அந்த இடத்தை நிரப்பத்தான் யாருமே இல்லை. 
-    திண்டுக்கல் சீனிவாசன். 

*    தமிழகத்தில் அடுத்து அமைய இருக்கும் அரசு பா.ஜ.க. கூட்டணி அரசாகத்தான் இருக்கும். ஊழல் இல்லாத, தூய்மையான அரசை பா.ஜ.க.வால் மட்டுமேதான் தர முடியும். 
-    பொன்.ராதாகிருஷ்ணன்

*    தமிழகத்தில் நடக்க உள்ள உள்ளாட்சி தேர்தலில் எங்கள் கட்சி போட்டியிடும். தனிச்சின்னம் கிடைக்காவிட்டாலும் இந்த தேர்தலில் போட்டியிடுவோம். தமிழக அரசியலில் மாற்றம் ஏற்படும் என ரஜினிகாந்த் கூறியிருப்பது உண்மைதான். 
-    டி.டி.வி.தினகரன்

*    வர இருக்கின்ற உள்ளாட்சி தேர்தலில், தி.மு.க. கூட்டணியில் உள்ள சில கட்சிகள், அ.தி.மு.க. கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளது. நடிகர் ரஜினியின் வெற்றிட கருத்துகு முதல்வர் இ.பி.எஸ். தக்க பதில் அளிப்பார். 

-    செல்லூர் ராஜு

click me!