ஸ்டாலினுக்கு ஆயிரம் ஏக்கரை எழுதி வைக்கும் டாக்டர் ராமதாஸ்: ‘பஞ்சமி நில’ பஞ்சாயத்தில் பொளேர் திருப்பம்.

By Vishnu PriyaFirst Published Nov 22, 2019, 6:19 PM IST
Highlights

தி.மு.க.வுக்கு எதிராக அ.தி.மு.க.வை விட பெரிதாக படை திரட்டி நிற்கிறது பா.ம.க. காரணம் கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது அ.தி.மு.க.வின் கூட்டணியில் இணைந்த ராமதாஸை நோக்கி ‘வெட்கமாக இல்லையா?’ என்று ஸ்டாலின் வைத்த விமர்சனமே காரணம். 

தி.மு.க.வுக்கு எதிராக அ.தி.மு.க.வை விட பெரிதாக படை திரட்டி நிற்கிறது பா.ம.க. காரணம் கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது அ.தி.மு.க.வின் கூட்டணியில் இணைந்த  ராமதாஸை நோக்கி ‘வெட்கமாக இல்லையா?’ என்று ஸ்டாலின் வைத்த விமர்சனமே காரணம்.  அந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி பெரும் வெற்றி பெற்றது. ஆனால் பா.ம.க. அங்கம் வகித்த அ.தி.மு.க. கூட்டணியோ மிக மோசமான தோல்வியை தழுவியது. தேர்தலுக்குப் பிறகு தி.மு.க.வை மிக மோசமாக சாட துவங்கினார் ராமதாஸ். குறிப்பாக ’நிறைவேற்ற இயலாத பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசி, மக்களை நம்ப வைத்து ஏமாற்றி, ஜெயித்திருக்கிறார் ஸ்டாலின்.’ என்றார். இதற்கு தி.மு.க.வும் ‘படு தோல்வியால் உளறும் பா.ம.க.’ என்று போட்டுத் தாக்கியது. 


இந்த நிலையில், தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி இருக்கும் நிலம் தலித்களுக்கு சொந்தமான பஞ்சமி நிலம்! என்று ஒரு குண்டை வீசினார் ராமதாஸ். பெரும் பரபரப்பை உருவாக்கிய இந்த விவகாரம் விசாரணை அது இதுவென போய்க் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் சமீபத்தில் பேசிய ஆர்.எஸ்.பாரதி “ கழகம் மீது அவதூறு கூறி வரும் ராமதாச் மீது வழக்கு பதிய இருக்கிறோம். ராமதாஸின் ஆயிரம் ஏக்கர் நிலம் யார் பெயரில் இருக்கிறது? என்பது வழக்கு போடும்போது தெரிய வரும்.” என்று கூறியிருந்தார். 
இதற்கு ட்விட்டரில் பதிலடி கொடுத்திருக்கும் ராமதாஸ் “முரசொலி விவகாரத்தில் குற்றமற்றவர்கள் என நிரூபிக்க முடியத தி.மு.க. அந்த சிக்கலை எழுப்பிய எனக்கு ஆயிரம் ஏக்கர் நிலம் இருப்பதாகவும், அதைப் பற்றி தெரிவிக்கப் போவதாகவும் கூறியுள்ளது. 


நான் இந்த சவாலை ஏற்கிறேன். எனது ஆயிரம் ஏக்கர் குறித்த விபரத்தை அவர்கள் கூறட்டும். அப்படி ஒரு நிலம் இருந்தால் அதை அவர்களுக்கே  கொடுத்துவிடுகிறேன்.” என்று கூறியுள்ளார். இந்த விவகாரம்தான் ‘ஸ்டாலினுக்கு ஆயிரம் ஏக்கர் நிலத்தை எழுதி வைக்க இருக்கிறார் டாக்டர் ராமதாஸ்’ என்று அரசியலரங்களி பரபரப்பைக் கிளப்பி வருகிறது. 

click me!