எத்தனையோ பாவங்களுக்கு சூத்திரதாரி எடப்பாடி... துரைமுருகன் கடும் தாக்கு..!

By Thiraviaraj RMFirst Published Nov 22, 2019, 5:19 PM IST
Highlights

பொதுவாழ்க்கையில் நேர்மையும், தூய்மையும் உள்ளோர் தான் பாவ, புண்ணியம் பற்றி பேச வேண்டும். 

அரசியல் வாழ்க்கை தொடங்கியது முதல் கொடநாடு வரை எத்தனையோ பாவங்களுக்கு சூத்திரதாரி முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்று திமுக பொருளாளர் துரைமுருகன் விமர்சனம் செய்துள்ளார்.

இன்று காலை தென்காசி மாவட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘ஆட்சியில் இருந்தபோதும், இல்லாதபோதும் மக்களுக்கு எதையும் செய்யாதவர்களுக்கு பாவமன்னிப்பு கிடைக்காது’என ஸ்டாலினை குறி வைத்து தாக்கி பேரினார். 

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய திமுக பொருளாளர் துரைமுருகன், ’’அரசியல் வாழ்க்கை தொடங்கியது முதல் கொடநாடு வரை எத்தனையோ பாவங்களுக்கு சூத்திரதாரி எடப்பாடி பழனிசாமி. பொதுவாழ்க்கையில் நேர்மையும், தூய்மையும் உள்ளோர் தான் பாவ, புண்ணியம் பற்றி பேச வேண்டும். 

மறைமுகத்தேர்தல் என்பது ஒருநாள் இரவில் உதயமானதற்கு என்ன காரணம்? தோல்வி பயம் தானே?  என கேள்வி எழுப்பி உள்ளார். இதனையடுத்து உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்காமல், மாவட்டத்தை 2 ஆக பிரித்து புதிய பெயரைச் சூட்டிவிட்டாலே பெரிய சாதனையாக நினைத்துக் கொள்கிறார் முதலமைச்சர் பழனிசாமி’’என அவர் விமர்சித்துள்ளார். 

click me!