இந்த ஆட்சி எவ்வளவு கேவலமா இருக்கிறது பாருங்க.. அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சால் அதிமுகவில் சலசலப்பு..!

Published : Jan 26, 2021, 01:06 PM ISTUpdated : Jan 28, 2021, 06:57 PM IST
இந்த ஆட்சி எவ்வளவு கேவலமா இருக்கிறது பாருங்க.. அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சால் அதிமுகவில் சலசலப்பு..!

சுருக்கம்

தமிழகத்தில் இந்த ஆட்சி எவ்வளவு கேவலமாக இருக்கிறது என்று பாருங்கள் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மேடையில் பேசியது தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழகத்தில் இந்த ஆட்சி எவ்வளவு கேவலமாக இருக்கிறது என்று பாருங்கள் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மேடையில் பேசியது தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

திண்டுக்கல்லில் அதிமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தல் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் கூறியதாவது:-தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.2,500 தரக்கூடாது என்று நீதிமன்றத்தில் தி.மு.க.வினர் தடை உத்தரவு கேட்டனர். ஆனால் நீதியரசர்கள் அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்பதனால் நாமெல்லாம் மகிழ்ச்சியாக பொங்கல் பரிசு ரூ.2500ஐ பெற முடிந்தது.

இதை வாழ்த்த மாட்டீர்கள். ஆனால் நீங்கள் சொன்னதையெல்லாம் நாங்கள் கொடுத்தாச்சு என்றால் கேட்பையில் நெய் வடிக்கிறது என்றால் கேட்பாருக்கு புத்தி எங்க போச்சு அறிவு என்று தான் சொல்வார்கள் எனத் தெரிவித்தார்.

மேலும், தயவு செய்து இந்த ஆட்சி எவ்வளவு கேவலமாக இருக்கிறது என்று பாருங்கள். எவ்வளவு அசிங்கமாக போய்க்கிட்டு இருக்கிறது என்று சிந்தியுங்கள் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. கடந்த சில நாட்களாகவே அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தொடர்ந்து உளறல் பேச்சில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

PREV
click me!

Recommended Stories

விருகம்பாக்கம் தொகுதி யாருக்கு..? பிரபாகர் ராஜாவா..? தனசேகரனா..? ட்விஸ்ட் வைக்கும் திமுக தலைமை..!
பாரதியாரே நமக்கு சல்லி... சப்ப பீஸு..! மகாகவியை ரொம்ப கேவலமாக பேசும் திமுக கூட்டம்..!