சி.வி.சண்முகம் உடல்நிலை குறித்து வதந்தி... விளக்கமளித்த அமைச்சர் தரப்பு..!

By vinoth kumarFirst Published Jul 8, 2020, 5:13 PM IST
Highlights

தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், அமைச்சரின் உதவியாளர் தரப்பில் கூறுகையில் இதுபோல வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கூறியுள்ளார். 

தமிழகத்தை கொரோனா தொற்று புரட்டிப்போட்டு வரும் நிலையில், அதன் தாக்கத்திற்கு அமைச்சர்கள் முதல் அடிமட்ட மக்கள் அனைவரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், தமிழக சட்ட அமைச்சர் சி.வி.சண்முகமும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளதாக கடந்த 10 நாட்களுக்கு முன்பு செய்திகள் வெளியாகின. ஆனால், அவருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில், அவருக்கு தொற்று பாதிப்பு இல்லை என்று கூறப்பட்டது.

ஆனாலும், கடந்த சில வாரங்களாக அமைச்சர் வெளியே தலைக்காட்டாமல் இருந்து வந்தார். இதன் காரணமாக அவர்  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பதாக மீண்டும் செய்திகள் வெளியாகின. இதனையடுத்து, திடீரென விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் நடைபெற்றது. இதில், சி.வி.சண்முகம் கலந்துகொண்டு தனது பணியை மீண்டும் தொடங்கினார். 

இந்நிலையில், அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியானது. ஆனால், அமைச்சர் நலமுடன் இருக்கிறார் தேவை இல்லாத வதந்திகளை நம்ப வேண்டாம் என அவரின் உதவியாளர் தரப்பில் தகவல் தெரிவித்துள்ளார்.

click me!