
திண்டிவனத்தில் நடைபெற்ற கோயில் தேரோட்ட திருவிழாவில் பங்கேற்ற அமைச்சர் சிவி.சண்முகம் திடீரென மயங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ளது திந்திரிணிஸ்வரர் கோயில். பிரசித்தி பெற்ற இத்திருக்கோயிலின் பிரம்மோற்சவம் கடந்த 29 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதற்கிடையே திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் உற்சவம் இன்று காலை 9.45 மணிக்கு தொடங்கியது.
இதில் கலந்துகொண்ட சட்டத்துறை அமைச்சர் சிவி.சண்முகம் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார்.
அப்போது திடீரென அவர் மயங்கி விழுந்ததால் தேரோட்ட திருவிழாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது இதையடுத்து மயக்கமடைந்த அமைச்சருக்கு மருத்துவர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
கோயில் தேரோட்ட விழாவில் பங்குபெற்ற அமைச்சர் திடீரென மயங்கி சரிந்தது விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.