மாணவர்கள் மட்டுமல்ல அனைவரும் மரம் வளர்க்க வேண்டும் - வேண்டுகோள் விடுத்த செங்கோட்டையன்

 
Published : Oct 23, 2017, 06:32 AM ISTUpdated : Sep 19, 2018, 01:20 AM IST
மாணவர்கள் மட்டுமல்ல அனைவரும் மரம் வளர்க்க வேண்டும் - வேண்டுகோள் விடுத்த செங்கோட்டையன்

சுருக்கம்

Minister Chengottiyan requested that not only students but everyone should grow for a tree.

மாணவர்கள் மட்டுமின்றி  அனைவருமே ஆளுக்கொரு மரம் வளர்க்க வேண்டும் என அமைச்சர் செங்கோட்டையன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

அதிமுக இரு அணியாக பிரிந்தபோது பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்த மாஃபா பாண்டியராஜன் ஒபிஎஸ்சுடன் கூட்டணி சேர்ந்தார். 

இதனால் அவருக்கு கொடுக்கப்பட்ட அமைச்சர் பதவி எடப்பாடி அணியில் இருந்த செங்கோட்டையனுக்கு கொடுக்கப்பட்டது. இதையடுத்து பள்ளிக்கல்வி துறையில் பல திட்டங்களை செங்கோட்டையன் கொண்டுவந்தார். 

பத்து, மற்றும் பனிரெண்டாம் வகுப்புகளுக்கு மதிப்பெண்கள் பாதியாக குறைத்தது, மாணவ மாணவியருக்கு சிறப்பு வகுப்புகள், மாணவர்கள் மரம் நட்டால் இலவசமாக 5 மதிப்பெண்கள் போன்றவையும் இதில் அடங்கும். 

இந்நிலையில்,கோபியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்   செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். 

அப்போது பேசிய அவர், இயற்கையின் நிகழ்வில் பெருமளவு மாற்றம்  ஏற்பட்டுள்ளதாகவும் இதை தடுக்க வேண்டுமானால் மாணவர்கள் மட்டுமின்றி  அனைவருமே ஆளுக்கொரு மரம் வளர்க்க முன் வரவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். 

மேலும் தமிழக அரசின் தற்போதைய  முக்கிய திட்டம் மரம் வளர்ப்பதுதான் எனவும் அவர்  தெரிவித்தார். 
 

PREV
click me!

Recommended Stories

மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!