10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு… அமைச்சர் சொன்ன 'ஸ்வீட்' அறிவிப்பு

By manimegalai aFirst Published Oct 12, 2021, 7:40 PM IST
Highlights

10ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நடப்பாண்டில் காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் கிடையாது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி கூறி உள்ளார்.

சென்னை: 10ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நடப்பாண்டில் காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் கிடையாது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி கூறி உள்ளார்.

கொரோனா என்னும் பெருந்தொற்றால் தமிழகத்தில் பள்ளிகள் மூடப்பட்டு இருந்தன. கொரோனா பரவல் குறைந்துவிட்டதால் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்புகள் வரை நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

நவம்பர் 1ம் தேதி முதல் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந் நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் கிடையாது என்று அறிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:

நவம்பர் 1ம் தேதி திட்டமிட்டப்படி 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு வகுப்புகள் ஆரம்பிக்கும். காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் கிடையாது டிசம்பரில் ஒரு தேர்வு நடத்தப்படும், மார்ச் மாதத்தில் பொது தேர்வு நடக்கும் என்று கூறினார்.

click me!