குவிகிறது ராதாரவிக்கு எதிரான புகார்கள் - நடவடிக்கை எடுக்க போலீசில் மேலும் ஒரு புகார்

Asianet News Tamil  
Published : Mar 06, 2017, 04:26 PM ISTUpdated : Sep 19, 2018, 02:08 AM IST
குவிகிறது ராதாரவிக்கு எதிரான புகார்கள் - நடவடிக்கை எடுக்க போலீசில் மேலும் ஒரு புகார்

சுருக்கம்

radharavi criticize handicaps - tamilnadu milk association complaint

திமுக செயல்தலைவர் முக ஸ்டாலினின் பிறந்தநாளில் நடிகர் ராதாரவி மாற்றுதிறனாளிகளை கேவலபடுத்தும் வகையில், நடித்தும் பேசியும் காண்பித்தார்.

இது மாற்றுதிறனாளிகள் மனதை புண்படுத்தும் செயல் எனவும் அவர் மீது தகுந்த நடவைக்கை எடுக்க கோரியும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள், நல சங்கத்தின் சார்பில் கமிஷ்னர் அலுவலத்தில் புகார் மனு அளித்தார்.

சில தினங்களுக்கு முன்பு நடிகர் தாதாரவி அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார்.

திமுக செயல்தலைவர் ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த வாரம் சென்னை தங்க சாலை மணிக்கூண்டு அருகே திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது.

அக்கூட்டத்தில் பேசிய ராதாரவி மாற்றுதிறனாளிகளை இழிவு படுத்தும் விதாமகவும், ஒப்புக்கு சப்பாணி எனவும் விளையாட்டில் சேர்த்துக்கொள்ள கூட தகுதியற்றவர்கள் என விமர்சித்து பேசினார்.

ராதாரவியின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். சமூக வலைதளங்களிலும் ராதாரவி ஒரு இரக்கமற்றவர், மனசாட்சி இல்லதாவர், அவருக்கு பிள்ளை அல்லது பேரப்பிள்ளை இப்படி இருந்திருந்தால் பேசியிருப்பாரா என மாணவர்கள், இளைஞர்கள் விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில், ராதாரவியின் இந்த பேச்சு மாற்றுதிரனாளிகள் மனதை புண்படுத்தும் செயல் எனவும் அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க கோரியும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள், நல சங்கத்தின் மாநில தலைவர் பொன்னுசாமி கமிஷ்னர் அலுவலத்தில் புகார் மனு அளித்தார்.

அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது :

மாற்றுதிறனாளிகள் ஒப்புக்கு சப்பாணி, விளையாட்டில் கூட சேர்த்து கொள்ளமாட்டார்கள், எதற்கும் லாயக்கற்றவர்கள் என ராதாரவி பேசியுள்ளார்.

மேலும் மாற்றுதிறனாளிகளை அவரது குடும்பத்தினரே மதிப்பதில்லை என்ற அர்த்தத்தை தொனிக்கின்ற வகையில் பேசி நடித்து காண்பித்துள்ளார்.

ராதாரவியின் இந்த தரம் தாழ்ந்த பேச்சை மேடையில் இருந்த எழும்பூர் தொகுதி எம்.எல்.ஏ ரவிச்சந்திரன், திருவிக தொகுதி எம்.எல்.ஏ தாயகம்.கவி, திரைப்பட பாடகி சின்னப்பொண்ணு உள்ளிட்டோர் வாய்விட்டு சிரித்து ரசித்துள்ளனர்.

இதை நானும், எனது மனைவியும் சமூக வலைதளங்களிலும், தொலைகாட்சியிலும் காண நேரிட்டது. அப்போது நானும் மாற்றுதிறனாளியான  எனது மனைவியும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானோம்.

ஆதலால் இத்தகைய செயலில் ஈடுபட்ட ராதாரவி மீது இந்திய தண்டனை சட்டம் 1882 ன் படி, 268, 294, 499, 500,506, 511, ஆகிய பிரிவுகளின் கீழும், மாற்றுதிறனாளிகள் சட்டம், 2016 பிரிவு 92 ன் கீழும் வழக்கு பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு ஓராண்டிற்கு ஏதேனும் ஒரு மாற்றுதிறனாளிகள் இல்லத்தில் தங்கியிருந்து அவர்களுக்கு ராதாரவி சேவை செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

CM Vijay Convoy: காரின் கண்ணாடியை இறக்கிய முதல்வர் விஜய்! பாய்ந்து வந்த இளைஞர்! நடந்தது என்ன?
Semmalai Admk: செம்மலையை தட்டி தூக்கியதா தவெக? “கற்பூரம் கரையலாம்; கட்சி கரையலாமா?” என வேதனையுடன் வெளியேரும் செம்மலை.!