அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய பால் முகவர்கள் சங்கம்…!!!

Asianet News Tamil  
Published : Jun 25, 2017, 11:36 AM ISTUpdated : Sep 19, 2018, 12:48 AM IST
அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய பால் முகவர்கள் சங்கம்…!!!

சுருக்கம்

Milk Agents Turned Up Against Minister Rajendra Balaji

பாலில் கலப்படம் இருப்பதாக பொய் குற்றாச்சாட்டுகள் எழுப்பிய ராஜேந்திர பாலாஜியை பால்வளத்துறை அமைச்சர் பதவியில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என தமிழக முதலமைச்சருக்கு பால் முகவர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

தனியார் பால் நிறுவனங்கள் ரசாயனம் கலப்படம் செய்வதாகவும், தனியார் பாலை குடிப்பதால் குழந்தைகளுக்கு புற்றுநோய் வருவதாகவும், கூறி தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பொதுமக்கள் மத்தியில் தேவையற்ற பீதியையும், அச்சத்தையும் ஏற்படுத்தினார்.

குறிப்பாக குழந்தைகள், வயதானவர்கள், நோயாளிகளுக்கு அத்தியாவசிய உணவாக விளங்கும் பாலில் ஹைட்ரஜன் பெராக்சைடு, பார்மாலின் உள்ளிட்ட உயிருக்கு தீங்கிழைக்கும் வேதிப் பொருட்கள் கலப்படம் செய்யப்படுவதாகவும் கூறி வந்தார்.

மேலும் தனியார் பாலில் ரசாயனம் கலப்படம் இல்லை என நிருபித்தால் அமைச்சர் பதவியில் இருந்து விலகவும், தூக்கில் தொங்கவும் தயார் என ராஜேந்திர பாலாஜி பேட்டி அளித்து வந்தார்.

பால் கலப்படம் தொடர்பான வழக்கில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் தமிழகம் முழுவதும் சுமார் 886பால் மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வு செய்ததாகவும், அதில் 187பால் மாதிரிகள் மட்டும் தரம் குறைந்து காணப்பட்டதாகவும், எந்த பால் மாதிரியும் பாதுகாப்பற்றது என நிருபணமாகவில்லை எனவும் தெரிவித்திருந்தார்.

 

புனேவில் உள்ள மத்திய அரசின் உணவு பகுப்பாய்வுக் கூடத்தில் நடத்தப்பட்ட ஆய்வுகள் அடிப்படையில் தனியார் பால் நிறுவனங்கள் உயிருக்கு தீங்கிழைக்கும் ரசாயன பொருட்களை கலப்படம் செய்யவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனவே பொறுப்பின்றி செயல்பட்ட டி.ராஜேந்திர பாலாஜியை தமிழக பால்வளத்துறை அமைச்சர் பொறுப்பில் இருந்து  உடனடியாக பதவி நீக்கம் செய்வதோடு உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தி அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

'என்னை வெறி ஏத்தி விட்றாத'.. மீண்டும் செய்தியாளரிடம் சீறிய சீமான்! என்ன நடந்தது?
மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த புரட்சிக் கலைஞர்.. கேப்டன் விஜயகாந்துக்கு புகழாரம் சூட்டிய விஜய்!