சத்துணவுடன் மாணவர்களுக்கு இனி பால் !! தமிழக அரசின் அதிரடித் திட்டம் !!

Published : May 12, 2019, 08:54 AM IST
சத்துணவுடன் மாணவர்களுக்கு இனி பால் !! தமிழக அரசின் அதிரடித் திட்டம் !!

சுருக்கம்

தமிழ்நாட்டில் 1 ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை உள்ள மாணவ-மாணவிகளுக்கு சத்துணவுடன் பால் வழங்குவது தொடர் பாக தமிழக அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளிக்கூடங்களில் மதிய உணவு திட்டம் கொண்டு வரப்பட்டது. காலப்போக்கில் சத்துணவு திட்டமாக மாற்றப்பட்டது. தற்போது பள்ளியில் சத்துணவில் 13 வகையான உணவுகள் வழங்கப்படுகிறது. முட்டையும் வழங்கப்படுகிறது.

இந்நிலையில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு தினமும் காலையில ஒரு கப் பால் வழங் கலாமா என்று அரசு பரிசீலித்து வருகிறது. பாலில் கால்சியம் மற்றும் புரதச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவைகள் குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கு நல்லது. 

எனவே சத்துணவில் காய்கறிகள் முட்டை இவற்றுடன் தினமும் காலையில் ஒரு கப் பால் வழங்குவது பற்றி யோசித்து வருகிறார்கள். ஏற்கனவே கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இதே திட்டம் பரிசீலிக்கப்பட்டு நடைமுறை சிக்கல்களை காரணம் காட்டி கைவிடப் பட்டது. 

இப்போது மீண்டும் பால் வழங்கும் திட்டம் பரிசீலிக்கப்படுகிறது. நடைமுறையில் பாலை கெடாமல் பாதுகாப்பது சிரமமாக இருக்கும். எனவே பால் பவுடரை வாங்கி கலந்து கொடுக்கலாமா என்று ஆலோசிக்கிறார்கள்.

 இதிலும் கொள்முதல், முறையாக வழங்கப் படுகிறதா என்ற கண்காணிப்பு அவசியம். எனவே பால் வழங்குவதில் ஏற்படும் நடைமுறை சிக்கல்களையும் அதை களைந்து இந்த திட் டத்தை நிறைவேற்றுவது பற்றியும் பரிசீலித்து வருகிறார்கள்.

PREV
click me!

Recommended Stories

கொளுத்திப் போட்ட எடப்பாடி..! கொந்தளித்த பிரேமலதா-டிடிவி, ஓபிஎஸ்..! ஆப்பு வைத்த வியூக வகுப்பாளர்கள்..!
திமுக அரசு அலட்சியத்தால் 9 பேர் பலி.. 'அந்த' நிதி எங்கே?.. கொந்தளித்த அண்ணாமலை!