நள்ளிரவு 12 மணிக்கு ஜெ. நினைவிடத்தில் மரியாதை – அதிமுக தொண்டர்களால் திடீர் பரபரப்பு

 
Published : Feb 24, 2017, 12:05 PM ISTUpdated : Sep 19, 2018, 01:39 AM IST
நள்ளிரவு 12 மணிக்கு ஜெ. நினைவிடத்தில் மரியாதை – அதிமுக தொண்டர்களால் திடீர் பரபரப்பு

சுருக்கம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் இன்று மாநிலம் முழுவதும் அதிமுகவினர் கொண்டாடி வருகின்றனர்.

இந்த பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில் சசிகலா – ஓ.பி.எஸ். என இரு அணிகளும் தனித்தனியாக ஈடுபட்டுள்ளதால், தொண்டர்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர்.

இந்நிலையில் எந்த அணியிலும் சேராமல், எல்லோருக்கும் முன்னதாக பிறந்தநாள் விழாவை தமிழக தெலுங்கு ரெட்டியார்  சங்க தலைவர் ஜெகதீஷ்வர ரெட்டி, ஒரு குழுவினர் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு ஜெயலலிதா நினைவிடத்தில் கொண்டாடினர்.

நேற்று நள்ளிரவு 12 மணிக்கு ஜெயலலிதா நினைவிடம் சென்ற அந்த குழுவினர், சர்வமத பிரார்த்தனை நடத்தினர். பின்னர், மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

சுமார் 50 பேர் கொண்ட அந்த குழுவினர், ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்திவிட்டு, மெழுகு வர்த்தி ஏற்றி சமாதியை சுற்றி வந்தனர். பின்னர் சர்வ மத போதகர்களை கொண்டு சிறப்பு பிராத்தனை நடத்தினர்.

இதுகுறித்து ஜெகதீஸ்வர ரெட்டி கூறுகையில், “நான் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தீவிர ரசிகன்.  கடந்த ஆண்டு, ஜெயலலிதாவின் பிறந்தநாளை விமர்சையாக கொண்டாடினோம். ஆனால், இந்த ஆண்டு அவர் இல்லாமல் கொண்டாடும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டோம்.

ஜெயலலிதா இல்லாமல் கொண்டாடும் இந்த பிறந்தநாளை, அனைவருக்கும் முன்னதாகவே கொண்டாட வேண்டும் என முடிவு செய்தோம். அதற்காகவே அவரது நினைவிடத்தில், நள்ளிரவு 12 மணிக்கு சென்று, மாரியாதையும், அஞ்சலியும் செலுத்தி வணங்கினோம்.

இதற்கிடையில், ஜெயலலிதாவின்  நினைவிடத்தில் திடீரென ஒரு கூட்டம் வந்ததை பார்த்ததும், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அதிர்ச்சியடைந்தனர். பின்னர், அவர்களிடம் விசாரித்தபோது, நினைவிடத்தில் மரியாதை செலுத்த வந்தது தெரிந்தது. இதனால், போலீசார் நிம்மதி அடைந்தனர்.

PREV
click me!

Recommended Stories

விஜய் வாக்குகளால் கதிகலங்கும் திமுக..! கடைசியில் கனிமொழியை நம்பி இருக்கும் மு.க.ஸ்டாலின்..!
பணத்தை பெரிதாக நினைக்காமல் தியாக வாழ்க்கை வாழும் ஸ்டாலின்- உதயநிதி..! நெஞ்சு புடைக்க புகழும் கருணாஸ்..!