
எம்ஜிஆரின் வாழ்க்கைக்கும் நடிப்புக்கும் வித்தியாசம் எதுவும் இருக்காது எனவும், ஏழைகளின் மெம்பாட்டிற்கு எம்ஜிஆரே காரணம் எனவும் திருவண்ணாமலை நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புகழாரம் சூட்டியுள்ளார்.
திருவண்ணாமலையில் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்து பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், எம்ஜிஆர் விவசாயிகளை போற்றியவர் எனவும், விவசாயிகளின் வாழ்க்கையில் ஒளியை ஏற்றியவர் எனவும் தெரிவித்தார்.
எம்ஜிஆரின் ஆட்சி காலத்தில் தமிழகத்தில் 7 பல்கலை கழகங்கள் நிறுவப்பட்டதாகவும், ஏழை குழந்தைகளின் படிப்பு கனவை நனவாக்கியவர் எம்ஜிஆர் எனவும் குறிப்பிட்டார்.
வறுமையால் குழந்தைகள் வாடக்கூடாது என சத்துணவு திட்டத்தை எம்ஜிஆர் கொண்டு வந்தார் எனவும், காவிரி பிரச்சனையை சிறப்பாக கையாண்டவர் எனவும் கூறினார்.
கிராமங்களில் வீட்டுக்கு ஒரு விளக்கு திட்டத்தையும், விவசாயிகளுக்கு பல்வேறு நல திட்டங்களையும் கொண்டு வந்து அவர்களின் வாழ்க்கையில் ஒளிவிளக்கை ஏற்றியவர் எம்ஜிஆர் என தெரிவித்தார்.
எம்ஜிஆர் அரசியல் சாதூர்யத்துடன் நடந்து கொண்டவர் எனவும், ஏழைகளின் மேம்பாட்டிற்கு எம்ஜிஆரே காரணம் எனவும் தெரிவித்தார்.
மேலும் இலவசமாக வழங்கபட்ட பொருட்களை சோதித்து வழங்கியவர் எம்ஜிஆர் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தவர் எம்ஜிஆர் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புகழாரம் சூட்டினார்.