எம்.ஜி.ஆர். ரசிகர்கள் தலையில் குல்லா போடும் ரஜினி...ஓட்டுக்காக உலகநாயகனாக மாறும் பலே வித்தை

 
Published : Jul 14, 2018, 03:52 PM ISTUpdated : Sep 19, 2018, 02:41 AM IST
எம்.ஜி.ஆர். ரசிகர்கள் தலையில் குல்லா போடும் ரஜினி...ஓட்டுக்காக உலகநாயகனாக மாறும் பலே வித்தை

சுருக்கம்

MGR Fans are going to shake the head in the head of Rajini

எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பதவியேற்ற பின்பு கையில் எடுத்த முக்கியமான அஸ்திரம் ‘எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழா’ தமிழ்நாடு முழுவதும் ஓடோடி சென்று எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழாவை நடத்தினார் எடப்பாடி பழனிசாமி. இதன் மூலம் எம்.ஜி.ஆர்-ன் ரசிகர்களை கவரலாம் என்பதுதான் அவரின் திட்டம் என்று சொல்லப்பட்டது. இப்போது அதற்கும் போட்டி வந்துவிட்டது. ‘மக்கள் மனதில் அடுத்த எம்.ஜி.ஆர்., ரஜினியாகத்தான் இருக்க வேண்டும் இதுதான் பி.ஜே.பி’னரின் திட்டம் என்கிறார்கள்.இருபது ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் பேசிவந்த ரஜினி, கடைசியாக ‘சிஸ்டம் சரியில்லை’ என்று அரசியலுக்கு வந்துவிட்டார். இரண்டு திராவிட கட்சிகளுடனும் ரஜினி பழகி வந்தாலும் பி.ஜே.பி., கட்சியின் மீது அவருக்கு ஈர்ப்பு உள்ளது என்கின்றனர். சமீபத்தில் தமிழகம் வந்த அமித்ஷா ‘தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிதான் தமிழ்நாட்டில் மலரும்’ என்றிருக்கிறார். இந்த தேசிய ஜனநாயக கூட்டணி ரஜினியை வைத்துதான் அமையும் என்கிறார்கள். ரஜினிக்கு தமிழ்நாட்டில் செல்வாக்கு கூட வேண்டும் என்றால் அவரை எம்.ஜி.ஆர்-ன் அனுதாபியாக, ரசிகராக நிலைநிறுத்த வேண்டும். அதற்காகத்தான் தமிழக பா.ஜ.க. கட்சியும் பாடுபடுகிறது என்கின்றனர் அரசியல் விமர்சர்கள்.

இதை நிரூபிக்கும் விதமாகத்தான் ‘கடந்த மார்ச் மாதத்தில் ஏ.சி.சண்முகம் ஏற்பாட்டில் எம்.ஜி.ஆர். சிலையையும் திறந்து வைத்திருக்கிறார். எம்.ஜி.ஆர். ரசிகர்களின் ஓட்டுகளை, அவரது வாங்கு வங்கியை தன் பக்கம் திருப்பும் வேலையிலும் ரஜினி இறங்கியுள்ளதாக தெரிகிறது.எடப்பாடி பழனிசாமி முதலில் கையில் எடுத்த அஸ்திரத்தை தற்போது ரஜினியும், பி.ஜே.பி-யும் கையில் எடுத்திருக்கிறது. ரஜினி-பா.ஜ.கட்சி கூட்டணிதான் வரும் தேர்தலில் அமையும் என்றும் ஆரம்பத்தில் இருந்தே சொல்லப்பட்டுவருகிறது.இந்த இடத்தில் ரஜினியின் பேச்சை குறித்துக்கொள்ள வேண்டும் ‘எம்.ஜி.ஆரைப் போல ஒருவன் வருகிறேன் என்று சொன்னால் அவனை போல பைத்தியக்காரன் யாரும் இருக்க முடியாது’ என்றார் எம்.ஜி.ஆர். சிலை திறப்பு விழாவில். மேலும் ‘அவரை போலவே என்னாலும் நல்லாட்சி தர முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு’ என பேசியிருந்தார் ரஜினி.‘க்ஹாஹ் க்ஹாஹ் க்ஹாஹ்...’ என ரஜினியின் ட்ரேட் மார்க் சிரிப்பைத்தான் நினைத்துக்கொள்ள வேண்டும்.

PREV
click me!

Recommended Stories

இபிஎஸ்.. ஸ்டாலின்.. விஜய்... யார் முதல்வரானாலும் மக்கள் அந்த கொடூரத்தை அனுபவிப்பார்கள்..! பீதி கிளப்பும் உண்மை..!
திமுக- காங்கிரஸ் செய்த வரலாற்றுப் பிழை.. நடுக்கடலில் தவிக்கும் மீனவர்கள்.. இபிஎஸ் வேதனை!