பணம் கொடுத்தே ஆட்களை அழைத்து வருகிறார்கள்... தினகரன் பகீர் குற்றச்சாட்டு

By vinoth kumarFirst Published Sep 30, 2018, 3:12 PM IST
Highlights

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக பணம் கொடுத்து ஆட்கள் வரவழைக்கப்படுவதாக டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக பணம் கொடுத்து ஆட்கள் வரவழைக்கப்படுவதாக டிடிவி தினகரன்  கூறியுள்ளார்.  அதிமுக நிறுவனரும், முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா மற்றும் தமிழ்நாடு 50 ஆம் ஆண்டு பொன்விழா 
சென்னை, நந்தனம், ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று மாலை நடைபெறுகிறது. 

இந்த விழாவில் 5 முதல் 7 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என்று அமைச்சர் ஜெயக்குமர் கூறியிருந்த நிலையில், தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் எம்.ஜி.ஆர். ரசிகர்கள், மகளிர் அணியினர், பொதுமக்கள் என ஏராளமானோர் சென்னை நோக்கி படையெடுத்துள்ளனர். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் 7 லட்சம் பேர் கலந்து கொள்வதாக அமைச்சர் கூறியிருந்ததற்கு, 7 லட்சம் பேரை எவ்வாறு திரட்ட முடியும் என்ற கேள்வியை அரசியல் கட்சி தலைவர்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் கருத்து நிலவி வந்தது. தமிழகத்தின் தென் பகுதிகளில் இருந்து ஏராளமான வாகனங்கள் சென்னையை நோக்கி வருகின்றன. 

இந்த நிலையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொது செயலாளர் டிடிவி தினகரன், செய்தியாளர்களிடம் பேசும்பொது, எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பங்கேற்க பணம் கொடுத்து ஆட்களை அழைத்து வருவதாக கூறியுள்ளார். டிடிவியின் இந்த கருத்துக்கு நெட்டிசன்கள் ஆதரவாகவும், அவருக்கு எதிராகவும் கருத்துக்களைக் கூறி வருகின்றனர்.

click me!