ஏலத்திலிருந்த கருணாநிதியின் கோபாலபுரம் வீடு. எம்ஜிஆர் ஜெயலலிதா மீட்டனர்.. முன்னாள் அமைச்சர் பிளாஷ்பேக் பேச்சு.

By Ezhilarasan BabuFirst Published Mar 3, 2021, 11:00 AM IST
Highlights

அப்போது அவர் பேசியதாவது:- 9,10 ,11 ஆம் வகுப்பு தேர்ச்சி என்ற அறிவிப்பு வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும், பள்ளி மாணவர்களின் நலன் கருதி இந்த அறிவிப்பை முதல்வர் வெளியிட்டுள்ளார்.  

கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் வீடு ஏலம் போகும் நிலையில்  இருந்தபோது எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் எங்கள் தங்கம் படத்தில் இலவசமாக நடித்து ஏலத்தில் இருந்து வீட்டை மீட்டதுடன், கடனை அடைத்தனர் என அதிமுக இலக்கிய அணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பா. வளர்மதி கூறியுள்ளார். ஆனால் இன்று கருணாநிதியின் குடும்பத்திற்கு பல கோடி சொத்துக்கள் எப்படி வந்தது என்று கூற முடியுமா? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது, இந்நிலையில் அதை எதிர்கொள்ள தமிழக அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. குறிப்பாக அதிமுக-திமுக ஆகிய இரு கட்சிகளும் கூட்டணிப் பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு என மின்னல் வேகத்தில் செயல்பட்டு வருகின்றன.  இந்நிலையில் அதிமுக முன்னணித் தலைவர்கள், அமைச்சர் பட்டாளம் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றது. அந்த வகையில் மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாளையொட்டி செங்கல்பட்டு மாவட்டம் அனகாபுத்தூரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் அதிமுக முன்னாள் அமைச்சரும் அக்காட்சியின் இலக்கிய அணி செயலாளருமான பா. வளர்மதி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். 

அப்போது அவர் பேசியதாவது:- 9,10 ,11 ஆம் வகுப்பு தேர்ச்சி என்ற அறிவிப்பு வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும், பள்ளி மாணவர்களின் நலன் கருதி இந்த அறிவிப்பை முதல்வர் வெளியிட்டுள்ளார். அது  சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு அமோக வெற்றியை பெற்று தரும். கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் வீடு ஏலம் போகும் நிலையில் இருந்தபோது, புரட்சித்தலைவர் எம்ஜிஆர், ஜெயலலிதாவும் இணைந்து எங்கள் தங்கம் படத்தில் இலவசமாக நடித்து ஏலத்தில் இருந்த கருணாநிதியின் வீட்டை மீட்டனர். அதற்காட கடனை அடைத்தனர். 

வீடு ஏலம் போகும் நிலையில் இருந்த கருணாநிதியின் குடும்பத்திற்கு இப்போது பல கோடி சொத்துக்கள் எப்படி வந்தது.?  பூந்தமல்லியில் சுமார் 130 ஏக்கர்  நிலமும், பட்டுரில்  95 ஏக்கர் நிலம் கருணாநிதி குடும்பத்தின் பெயரில் உள்ளது இவ்வளவு சொத்துக்கள் எங்கிருந்து வந்தது.  ஆனால் தமிழக மக்களை பாதுகாக்கும் அரசாக அதிமுக அரசு விளங்குகிறது.  கட்டப்பஞ்சாயத்து நில அபகரிப்புக்கு பெயர்பெற்ற திமுகவை மக்கள் புறக்கணிக்க வேண்டும். இவ்வாறு  அவர் பேசினார்.
 

click me!