திமுக தேர்தல் அறிக்கை மார்ச் 11ல் வெளியீடு... பல அதிரடி அறிவிப்பு.. இலவசங்கள் வெளியாக வாய்ப்பு?

By vinoth kumarFirst Published Mar 3, 2021, 10:58 AM IST
Highlights

தமிழக மக்களின் மனங்களை கவரும் வகையில் மார்ச் 11ம் தேதியன்று திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட உள்ளனர். இதில் முக்கிய வாக்குறுதிகள் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

தமிழக மக்களின் மனங்களை கவரும் வகையில் மார்ச் 11ம் தேதியன்று திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட உள்ளனர். இதில் முக்கிய வாக்குறுதிகள் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

தேர்தலில் போட்டியிடும் ஒவ்வோர் அரசியல் கட்சியும் தங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால், அல்லது தங்கள் கட்சி கூட்டணியில் இருந்தால் இந்தவகையான மக்கள் பிரச்சினைகளை தீர்ப்போம், இதுபோன்ற பிரச்சினைகளைத் தீர்க்க முன்னுரிமை அளிப்போம் என்றெல்லாம் வாக்குறுதி போன்று அளிப்பார்கள்.

இந்நிலையில், தமிழக மக்களின் மனங்களை கவரும் வகையில் திமுக தேர்தல் அறிக்கை மார்ச் 11-ல் வெளியிடப்படும் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் தமிழக மக்களின் விடியலுக்கான திட்டங்களுடன் தேர்தல் அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது. மக்களால் மக்களுக்காகவே உருவான திமுக தேர்தல் அறிக்கை தேர்தலில் கதாநாயகனாக விளங்கும். மக்களின் குறைகளை தீர்க்கவும், அவர்கள் வாழ்வை மேம்படுத்தவும் தேர்தல் அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக மிகப்பெரிய இலவச அறிவிப்பும் இருக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இது தவிர கல்வி, பெண்கள் முன்னேற்றம், வேளாண் துறை, மருத்துவப்படிப்பு, கல்வி வேலை வாய்ப்பு, பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட பல அம்சங்கள் இடம்பெறும். இதனுடன் முக்கிய அறிவிப்பாக இலவசங்கள் பற்றிய விவரம் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும், கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெறுகிறது என தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

click me!