காவிரி நீரை வீணாக்காமல் பயன்படுத்துவது எப்படி... முதல்வருக்கு ஆலோசனை சொன்ன டெல்டா விவசாயி...

By Selvanayagam PFirst Published Aug 12, 2019, 9:55 AM IST
Highlights

மேட்டூர் அணை  நிரம்பும் வரை காத்திருக்காமல் விவசாயத்திற்கு உடனே தண்ணீர் திறக்க வேண்டுமென டெல்டா பாசன விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர் 

கேரளா மற்றும் கர்நாடக  அணைகளின்  நீர்ப்பிடிப்புப்  பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது இதன் காரணமாக கர்நாடக  மாநிலத்தின்  கபினி, ராஜசாகர் உள்ளிட்ட அணைகள் நிரம்பி வழிகிறது, அந்த அணைகளில் இருந்து விநாடிக்கு சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் கன அடி நீர் தமிழகத்துக்கு திறக்கப்பட்டுள்ளது இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு விநாடிக்கு 1 லட்சத்து 25 ஆயிரம் கன அடிநீர்  மேட்டூர்  அணையில் நிரம்பி வருகிறது 

இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 82 புள்ளி 60 கன அடியாக உயர்ந்துள்ளது 

எனவே அணை முழு  கொள்ளளவை எட்டும் வரையில் காத்திருக்காமல், பாசனத்திற்காக உடனே தண்ணீர் திறக்க வேண்டும் என டெல்டா விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்

தற்போதே தண்ணீர் திறந்தால்தான் காவிரி ஆற்றை ஒட்டியுள்ள ஏரி குளம் குட்டைகளில் நீர் நிரம்பும்  என்றும் ஆலோசனை கூறியுள்ளனர் 

அணை முழு கொள்ளளவை எட்டிய பின்னர் தண்ணீர் திறந்தால் அதனால் எந்த பயனும் இல்லை என்று கூறும் விவசாயிகள் அந்த நீர் வீணாக கடலில் தான் கலக்கும் எனறும் தெரிவித்துள்ளனர் 

தண்ணீரை மொத்தமாகத்   திறக்கும் பட்சத்தில் இன்னும் சீர் செய்யப்படாத  திருச்சி முக்கொம்பு  அணை வழியாக தண்ணீர் வேகமாக  கொள்ளிடத்திற்கு பாய்ந்து  வீணாக கடலில் கலக்க வாய்ப்புள்ளது  என்று விவசாயிகள் கூறுகின்றனர்

எனவே அணை முழு கொள்ளளவை எட்டும் வரை காத்திருக்காமல் சிறுக சிறுக  தண்ணீரை வெளியேற்றினால் அது விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றும்  டெல்டா விவசாயிகள் கோரியுள்ளனர்

விவசாயிகளின் கோரிக்கை படி தண்ணீர் திறந்தால் விரைந்து வரட்சியை தணிக்க வாய்பாக இருக்கும் என்கின்றனர் விவசாயிகள்

click me!