மெர்சல் படத்தை மறு சென்சார் செய்ய வாய்ப்பில்லையாம் - பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டும் எஸ்.வி.சேகர்...

First Published Oct 21, 2017, 5:29 PM IST
Highlights
mersal image is right at the beginning of the censor and it is not possible to resume the image of Mersal said BJP executive Savi Shekhar.


மெர்சல் படத்தை ஆரம்பத்திலேயே சரியாக சென்சார் செய்திருக்க வேண்டும் எனவும் மெர்சல் படத்தை மறு சென்சார் செய்ய வாய்ப்பில்லை எனவும் பாஜக நிர்வாகி எஸ்வி சேகர் தெரிவித்துள்ளார். 

கடந்த தீபாவளி அன்று விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் மெர்சல். இதில் ஜி.எஸ்டி குறித்தும் பணமதிப்பிழப்பு குறித்தும் விமர்சிப்பது போன்ற சமூக அக்கறை கருத்துகள் இடம் பெற்றுள்ளன. 

இதற்கு பாஜக மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்து குறிப்பிட்ட காட்சிகளை நீக்க கோரி வலியுறுத்தி வருகின்றன. 

இதனிடையே இந்த ஆண்டின் சிறந்த COPY & PASTE    நிபுணர் யாரு என்று நடிகர் எஸ்.வி சேகர் தனது டுவிட்டர் பக்கத்தில் மெர்சல் படத்தை கலாய்ப்பது போன்று நேற்று கேள்வி எழுப்பியிருந்தார். 

இதற்கு எஸ்.வி.சேகர் டிவிட்டர் வாடிக்கையாளர்களிடம் வசமாக மாட்டிக்கொண்டார். அவரையும் பாஜகவையும் விமர்சகர்கள் கடுமையாக விமர்சித்திருந்தனர். 

ஆனாலும் மெர்சல் படத்தை தணிக்கை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி வந்தார் எஸ்வி சேகர். 

இந்நிலையில், இன்று மேலும் மெர்சல் குறித்து எஸ்வி சேகர் கருத்து தெரிவித்துள்ளார். அதாவது, மெர்சல் படம் இத்தகைய பிரச்சினையை சந்தித்துள்ளதற்கு காரணம் சென்சார் போர்டு அதிகாரி மதியழகன்தான் என தெரிவித்துள்ளார். 

மேலும், மெர்சல் படத்தை ஆரம்பத்திலேயே சரியாக சென்சார் செய்திருக்க வேண்டும் எனவும் மெர்சல் படத்தை மறு சென்சார் செய்ய வாய்ப்பில்லை எனவும் தெரிவித்துள்ளார். 
 

click me!