தணிக்கைத்துறைதான் தீர்வு காண வேண்டும்: ஒதுங்கிக்கொண்ட கடம்பூர் ராஜூ

First Published Oct 21, 2017, 4:33 PM IST
Highlights
mersal issue should be sort out by sensor board says minister kadambur raju


மெர்சல் பட பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டியது தணிக்கதுறை தான்  எனக் கூறியுள்ளார் அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ

 கோவில்பட்டி பகுதியில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளி ஒன்றில், தமிழக அரசின் விலையில்லா மடிக்கணிணி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ 190 மாணவ மாணவியருக்கு விலையில்லா மடிக்கணிணிகளை வழங்கினார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கடம்பூர் ராஜூ,  திரைப்படத்துறை எனது அமைச்சகத்தின்கீழ் தான் வருகிறது. தணிக்கை செய்த படங்களை வெளியிடுவதில் பிரச்சினை என்றால் தமிழக அரசு தலையிட்டு அவற்றை  வெளிக் கொண்டு வர உதவி செய்யும்,

நடிகர் கமல்ஹாசன் எடுத்த விஸ்வரூபம்  படத்துக்கு பிரச்சினை வந்தபோது,  மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலையிட்டு இரு தரப்பினரையும் அழைத்துப் பேசி திரைப்படம் வெளிவர உதவி செய்தார்.

சர்ச்சைக்குரிய வசனம், காட்சிகள் இடம் பெற்றால் அதனை நீக்க மத்திய அரசினால் நியமிக்கப்பட்ட தணிக்கைத்துறைக்கு தான் அதிகாரம் உள்ளது. தணிக்கைத்துறைக்கும் தமிழக அரசுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது.

மெர்சல் திரைப்படத்தில் இடம்பெற்ற காட்சிகளுக்கு எதிர்ப்பு என்றால் அவர்கள் தணிக்கைத்துறையைத்தான் அணுக வேண்டும் என்று கூறி ஒதுங்கிக் கொண்டார்.

click me!