
மக்கள் ஜனநாயகக் கட்சி தலைவர் மெஹபூபா முஃப்தி ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் காஷ்மீரி மொழியில் பேசினார். அப்போது உருது மொழியில் பேசச் சொன்னதால் அவர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். கட்சி தலைமையகத்தில் காஷ்மீரியில் மெஹபூபா தனது பத்திரிகையாளர் சந்திப்பைத் தொடங்கியவுடன், மற்றொரு பத்திரிகையாளர் அவரை உருது மொழியில் பேசச் சொன்னார். இதனால் மெஹபூபா முப்தி ஆத்திரமடைந்தார்.
மு.க.ஸ்டாலினை ஆங்கிலத்திலோ அல்லது உருதுவிலோ பேசச் சொல்லி கேட்பீர்களா? காஷ்மீர் பத்திரிகையாளர்கள் காஷ்மீர் மொழிக்கு கொஞ்சம் மரியாதை காட்ட வேண்டும். காஷ்மீர் கொஞ்சம் மட்டுமே மீதமுள்ளது. எனவே காஷ்மீர் மொழிக்கு கொஞ்சம் மரியாதை காட்டுங்கள்’’ என கூறினார். பின்னர் மெஹபூபா முஃப்தி காஷ்மீரில் பேசினார்.
மேலும் அவர், ‘‘வங்கதேசத்தில் நடப்பது எங்களுக்கு வருத்தமாக இருக்கிறது. ஆனால், அதை விமர்சிப்பவர்கள் இங்கு கும்பல் படுகொலைகள் நடக்கும்போது அமைதியாக இருக்கிறார்கள். ஜம்மு-காஷ்மீர் அரசாங்கம் அங்கு வசிக்கும் காஷ்மீரிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய பல்வேறு மாநிலங்களுக்கு அமைச்சர் குழுக்களை அனுப்ப வேண்டும் . நமது அரசாங்கம் ஒவ்வொரு மாநிலத்திற்கும், குறிப்பாக உத்தரகண்ட், இமாச்சலப் பிரதேசம் மற்றும் ஹரியானாவிற்கு, இதுபோன்ற சம்பவங்கள் அதிகம் நடக்கும் இடங்களுக்கு ஒரு அமைச்சர் குழுவை அனுப்ப வேண்டும்" என்று அவர் கூறினார்.
யூனியன் பிரதேசமான உத்தரகண்டில் சால்வை விற்பனையாளர் மீது நடந்த தாக்குதல் குறித்தும் அவர் பேசினார். குற்றம் சாட்டப்பட்டவரைக் கைது செய்ததற்கான பெருமையையும் அவர் ஏற்றுக்கொண்டார். "உடனடியாக நான் உத்தரகண்ட் டிஜிபியை ட்வீட் செய்து டேக் செய்து, அவரது தலையீட்டைக் கோரினேன். அதனால்தான் குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டார். காவல்துறையில் இன்னும் சில அதிகாரிகள் பதிலளிக்கும் திறன் கொண்டவர்கள் உள்ளனர். ஆனால், 72 மணி நேரத்தில் மூன்று சம்பவங்கள்? உத்தரகண்ட், இமாச்சலப் பிரதேசம் மற்றும் ஹரியானாவில் என்ன நடக்கிறது என்பது கவலையளிக்கிறது" என்று அவர் கூறினார்.