
மதுரை மாவட்டம், இளமனூர் பஞ்சாயத்துக்குட்பட்ட விளத்தூர் கண்மாயில் கனரக வாகனங்களை வைத்து டாரஸ் வண்டியில் அனுமதியின்றி மண் கடத்தப்பட்டு வருகிறது. அதிகாரிகள் கவனத்திற்கு வந்தும் நடவடிக்கைகள் எடுக்க பயப்படுகிறார்கள் என்கிறார்கள் அப்பகுதி மக்கள். விவசாய பயன்பாட்டிற்கு என்று போலியாக உத்தரவு பெற்றுக்கொண்டு எந்த விவசாயம் நிலத்திலும் எடுக்கப்பட்ட மண்ணை கொட்டாமல் ரியல் எஸ்ஸ்டேட் பிளாட்களுக்கு மண்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.
இதே போன்று ஓடைப்பட்டி ஊராட்சியில் அரசுக்கு சொந்தமான இடத்தில் மணல் கொள்ளை நடந்தது. கொட்டாம்பட்டியில் பட்டூர் கிராமத்தில் மண் திருட்டு என கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கிறது. இந்த மணல் திருட்டில் திமுக பிரமுகர் அழகுபாண்டியின் மைத்துனர் இளங்கோ கொடிகட்டி பறக்கிறார். மதுரை கிழக்கு தாசில்தார் மனேஷ்குமார், மேலூர் தாசில்தார் செந்தாமரை போன்றவர்கள் இளங்கோவிற்கு சிவப்பு கம்பளம் விரிக்கிறார்கள். அதன் மர்மம் என்னவென்றால் தினந்தோறும் சுவீட் பாக்ஸ்கள் மணல் மாஃபியாக்களிடம் இருந்து இவர்களுக்கு சென்று விடுகிறது. சட்ட மன்றத்தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதற்கான செலவுக்கு பணத்தை இப்படியெல்லாம் கொள்ளையடித்து சேர்த்து வருகிறார்களாம். கடிவாளம் போட வேண்டிய கலெக்டர் பிரவீன்குமார் கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன்? என கேள்வி எழுப்புகின்றனர் சமூக ஆர்வலர்கள்.
மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா கொட்டாம்பட்டி யூனியக்குட்பட்ட பட்டூர் கிராமத்தில் உள்ள குளத்தில் அரசு அனுமதியின்றி திருட்டு மணல் தற்போது கிட்டாச்சியில் லைட் பொறுத்தி அள்ளிவருகிறார்கள். அள்ளக்கூடியவர் அங்குள்ள தாசில்தாருக்கு வேண்டியவராம். வேலியே பயிரை மேய்ந்த கதையாக இருக்கிறது. காவல்துறையும் கண்டுகொள்வதில்லை நாங்கள் யாரிடம் போய் புகார் செல்வது என்று தெரியவில்லை என்கிறார்கள் விவசாயிகள்.
தனியாருக்கு சொந்தமான நிலத்தில் மூன்று அடிக்கு கீழே மண் எடுக்கும் போது, வருவாய் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அதிகாரிகள் முன்னிலையில் மண் எடுக்க வேண்டும். பகலில் மட்டுமே எடுக்க வேண்டும். இதற்குரிய பர்மிட் பெற வேண்டும், என பல்வேறு விதிமுறைகள் உள்ளன. ஆனால், இவற்றை காற்றில் பறக்க விட்டு விட்டு மண் எடுத்து விற்பனை செய்கின்றனர்.