ஐஸ் வியாபாரியின் மகனுக்கு மெடிக்கல் சீட் ...!! அள்ளிக் கொடுத்து நெகழ்ச்சியில் உறைய வைத்த அமைச்சர்..!!

By Ezhilarasan BabuFirst Published Nov 20, 2020, 12:33 PM IST
Highlights

குடும்பத்தின் வறுமை காரணமாக கல்லூரியில் சேர்வதற்கான கட்டணம் கூட கட்ட முடியாத நிலையில் இருந்த மாணவன் குறித்து அறிந்த தமிழக போக்குவரத் துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்கள், மாணவனையும் அவரது பெற்றோரையும் நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்து, அந்த மாணவனுக்கான மருத்துவப்படிப்பு நிறைவு செய்யும் வரை அவரது கல்லூரிக்கட்டணம் முழுவதையும் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தார். 

ஐஸ் வியாபாரம் செய்யும் கூலித் தொழிலாளியின் மகனின் மருத்துவ படிப்பிற்கான கல்லூரி கட்டணம் முழுவதையும் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் ஏற்றுக்கொண்டுள்ளார். கரூர் மாவட்டம் மண்மங்கலம் மாவட்டம், பஞ்சமாதேவி அஞ்சல், அரசு காலனியில் வசிக்கும் சுப்பிரமணி என்பவர் ஐஸ் வியாபாரம் செய்து தனது குடும்பத்தை நடத்தி வருகிறார். அவரின் மகன் மாரிமுத்து வாங்கல் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்த 12ஆம் வகுப்பில் 933 மதிப்பெண்கள் பெற்றார்

நீட் தேர்வில் 297 மதிப்பெண்கள் பெற்றார். ஏழை எளிய மாணவர்களின் மருத்துவப்படிப்பிற்கான கனவை நிறைவேற்றும் வகையில் தமிழக முதலமைச்சர் அவர்கள் அரசுப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு இளநிலை மருத்துவப் பிரிவுகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 7.5 சதவீத முன்னுரிமை அடிப்படையில் இடம் கொடுக்கப்படும் என்ற அறிவிப்பின் பயனாக மாணவர் மாரி முத்துவுக்கு கரூர் அரசு மருத்துவக்கல்லூரியில் மருத்துவப்படிப்பிற்கான இடம் கிடைத்தது.குடும்பத்தின் வறுமை காரணமாக கல்லூரியில் சேர்வதற்கான கட்டணம் கூட கட்ட முடியாத நிலையில் இருந்த மாணவன் குறித்து அறிந்த தமிழக போக்குவரத் துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்கள்,

மாணவனையும் அவரது பெற்றோரையும் நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்து, அந்த மாணவனுக்கான மருத்துவப்படிப்பு நிறைவு செய்யும் வரை அவரது கல்லூரிக்கட்டணம் முழுவதையும் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தார். மேலும், முதலாம் ஆண்டிற்கான கட்டணமாக ரூ.20,000 ரொக்கத்தை மாணவரிடம் இன்று (20.11.2020) கரூரில் வழங்கினார். எதிர்பாராத இந்த உதவியால் நெகிழ்ந்துபோன மாணவர் மற்றும் அவரது பெற்றோர் இடஒதுக்கீடு அளித்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், கல்லூரிக் கட்டணத்தை ஏற்று தங்களது வாழ்வில் ஒளியேற்றிய மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்களுக்கும் மனம் உருகி தங்களது நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டனர்.

 

click me!