பொதுமக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்த முதல்வர் எடப்பாடி!

By vinoth kumarFirst Published Nov 30, 2018, 5:16 PM IST
Highlights

முதலமைச்சரின் மருத்தவ காப்பீடு திட்டத்தில் சிகிச்சைக்கான தொகை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

முதலமைச்சரின் மருத்தவ காப்பீடு திட்டத்தில் சிகிச்சைக்கான தொகை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பயனாளர்கள், ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை கட்டணமின்றி சிகிச்சை பெற்று கொள்ளலாம் என அறிவித்தப்பட்டுள்ளது.

 

தமிழ்நாட்டில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் ஏழை எளிய குடும்பங்கள் ஆண்டு வருவாய் 72,000-க்கு கீழ் உள்ள பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சை செய்து கொண்டு பயன்பெறலாம். 

மேலும் மருத்துவ சிகிச்சை பதிவுபெற்ற தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் அனைத்து வயதினருக்கும் உபயோகித்துக் கொள்ளலாம். பச்சிளங் குழந்தைகளுக்கான சிகிச்சை முறை உட்பட 1016 சிகிச்சை முறைகளுக்கும், 113 தொடர் சிகிச்சை முறைகளுக்கும் மற்றும் 23 அறிதல் கண்டுப்பிடிப்பு முறைகளுக்கும் இந்த திட்டம் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

 

இத்திட்டத்தில் கீழ் ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. 1.58 கோடி பேர் முதல்வரின் காப்பீடு திட்டத்தில் இணைந்துள்ளனர். இந்த திட்டம் நாளை முதல் அமலுக்கு வரும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

click me!