திமுகவால்தான் மதிமுகவுக்கு 4 தொகுதிகளில் வெற்றி கிடைத்தது... அறிவாலயத்தில் வைகோ நெகிழ்ச்சி..!

Published : May 03, 2021, 10:01 PM IST
திமுகவால்தான் மதிமுகவுக்கு 4 தொகுதிகளில் வெற்றி கிடைத்தது... அறிவாலயத்தில் வைகோ நெகிழ்ச்சி..!

சுருக்கம்

மதிமுகவுக்கு 4 தொகுதிகளில் வெற்றி கிடைத்திருக்கிறது. இந்த வெற்றி திமுகவால் கிடைத்த வெற்றி என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.  

சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி 159 தொகுதிகளில் வெற்றி பெற்ற்து. திமுக மட்டும் 126 தொகுதிகளில் வென்று தனி பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைக்கிறது. அக்கட்சியின் மு.க. ஸ்டாலின் மே 7 அன்று முதல்வராகப் பதவி ஏற்க உள்ளார். இந்நிலையில், மு.க.ஸ்டாலினை சென்னை அண்ணா அறிவாலயத்தில் கூட்டணி கட்சித் தலைவர்கள் சந்தித்து தொடர்ந்து வாழ்த்து தெரிவித்துவருகிறார்கள். மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “மற்ற மாநில முதல்வர்கள் எல்லாம் இனி தமிழகத்துக்கு வந்து தமிழக முதல்வர் தலைமையில் இயங்கக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. தற்போது மு.க.ஸ்டாலினின் முழு கவனமும் கொரோனா தொற்று குறித்துதான் இருக்கிறது. அவருடன் பேசியதிலிருந்து இதை நான் அறிந்தேன். முந்தைய அரசு தேர்தலில் தோற்றுவிடுவோம் என்பதால், கடந்த இரண்டு மாத காலமாகவே அலட்சியத்துடன் இருந்தது.
கொரோனா தொற்றிலிருந்து மக்களைக் காப்பதில்தான் எனுடைய முழு கவனமும் இருக்கிறது என ஸ்டாலின் தெரிவித்தார். அந்தச் சவாலை அவர் நிச்சயம் சந்திப்பார். அதில் வெற்றியும் வெறுவார். தமிழகத்தையும் காப்பார். மக்களின் துன்பத்தை அகற்றுவது குறித்துதான் சிந்தித்துக் கொண்டிருக்கிறார். தமிழகத்துக்கு இது ஒரு பொற்காலம். மதிமுகவுக்கு 4 தொகுதிகளில் வெற்றி கிடைத்திருக்கிறது. இந்த வெற்றி திமுகவால் கிடைத்த வெற்றி” என்று வைகோ தெரிவித்தார்.
 

PREV
click me!

Recommended Stories

TN Cooperative Banks Gold Loan: தங்கம் வைத்திருப்போருக்கு ஜாக்பாட்! ஒரு கிராம் தங்கத்திற்கு ரூ.10,000 வரை கடன் - கூட்டுறவுத் துறை அதிரடி!
Magalir Urimai Thogai: அக்டோபரில் ரூ.2,500 வரப்போகுதா? முதல்வர் விஜய் கொடுக்கப்போகும் அடுத்த ஜாக்பாட்!