சமூக நலன் கொண்ட அமைப்பு PFI.. ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு தகுதி இருக்கா? கொந்தளித்த வைகோ

By Raghupati RFirst Published Sep 28, 2022, 8:30 PM IST
Highlights

மத்திய அரசால் இன்று தடை செய்யப்பட்டுள்ள அமைப்பு பல்வேறு சமூக நலனில் அக்கறை கொண்டு செயல்படுகிறது.வெள்ள காலங்களிலும் தீ விபத்து ஏற்பட்ட பகுதிகளிலும் சமூக நலம் கருதி பல தொண்டாற்றி இருக்கிறது பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா.

தமிழகத்தில் 50க்கும் மேலான இடங்களில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு நிபந்தனைகளுடன் அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது பல்வேறு கட்சிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த மதிமுக பொதுச் செயலாளர் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், போராட்டங்கள் மற்றும் பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், மத்திய அரசால் இன்று தடை செய்யப்பட்டுள்ள அமைப்பு பல்வேறு சமூக நலனில் அக்கறை கொண்டு செயல்படுகிறது.

இதையும் படிங்க..கொஞ்சம் பொறுங்க..பண்ருட்டி ராமச்சந்திரனை திடீரென சந்தித்த ஓபிஎஸ் - எடப்பாடியை அலறவிட்ட ஓபிஎஸ்!

வெள்ள காலங்களிலும் தீ விபத்து ஏற்பட்ட பகுதிகளிலும் சமூக நலம் கருதி பல தொண்டாற்றி இருக்கிறது பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா. ஆனால் சில இடங்களில் நடந்த வன்முறையை காரணம் காட்டப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் விலைவாசி உயர்வு மற்றும் சட்ட ஒழுங்கு குறித்த கேள்விக்கு, தமிழகத்தில் விலைவாசி உயர்வு தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. மத்திய அரசு ஜிஎஸ்டி வரி உயர்வை குறைத்திருக்க வேண்டும். 

இதையும் படிங்க..‘TTFவோட பவர் தெரியாம இருக்கீங்க.. கொஞ்சம் தான் பொறுமை’ - மீடியாக்களுக்கு எச்சரிக்கை விடுத்த டிடிஎஃப் வாசன்!

மேலும் தமிழக முதல்வர் சட்ட ஒழுங்கு பிரச்சனையில் சமூக நீதி மற்றும் சமத்துவத்தை நிலைநாட்டுகின்ற வகையிலே நடவடிக்கைகள் எடுத்து சிறந்த முறையில் ஆட்சி நடத்தி வருகிறார். காந்தி ஜெயந்தி அன்று ஆர். எஸ். எஸ் அமைப்பு பேரணி குறித்த கேள்விக்கு,  தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு காந்தி ஜெயந்தி அன்று பேரணி நடத்த தகுதி இல்லை’ என்று பேசினார்.

இதையும் படிங்க..செப்டம்பர் 29 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !

click me!