
மூன்று தொகுதிகளின் இடைதேர்தலில் போட்டியிடுவது , காவிரி மேலாண்மை பிரச்சனை மற்றும் அரசியல் பிரச்சனைகள் குறித்து மதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தாயகத்தில் நடந்து வருகிறது.
தஞ்சை, திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி இடைதேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முக்கிய கட்சிகளான திமுக , அதிமுக போட்டியிடுகிறது. இது தவிர இந்த தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடுகிறது. மற்ற கட்சிகள் தங்களது நிலையை அறிவிக்கவில்லை .
தேர்தலை புறக்கணிப்பதா, போட்டியிடுவதா எனபது குறித்து மக்கள் நலக்கூட்டணி கட்சிகளிடையே குழப்பம் ஏற்ப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் இன்று காலை 10:30 மணிமுதல் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின், மாவட்டச் செயலாளர்கள், உயர்நிலைக்குழு, ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக் குழு, அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள், தலைமைக் கழகச் செயலாளர்கள் கூட்டம், கழகத்தின் அவைத்தலைவர் திரு.திருப்பூர் சு.துரைசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது.
இந்த கூட்டத்தில் பல்வேறு அரசியல் மாறுபாடுகள் குறித்து முடிவெடுக்கப்படும் என தெரிகிறது.