முதல்வர் உடல்நலம் கிருத்துவ பேராயர்கள் நேரில் வந்து விசாரித்தனர்

Asianet News Tamil  
Published : Oct 23, 2016, 02:43 AM ISTUpdated : Sep 19, 2018, 03:14 AM IST
முதல்வர் உடல்நலம் கிருத்துவ பேராயர்கள் நேரில்  வந்து விசாரித்தனர்

சுருக்கம்

முதல்வர் உடல்நலம் குறித்து கிருஸ்த்துவ பேராயர்கள் அப்போலோ வந்து நலம் விசாரித்தனர்.

முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த மாதம் 22 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்றுடன் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒரு மாதம் ஆகிறது. முதல்வர் உடல்நிலையை கண்காணித்து சிகிச்சை அளிக்க லண்டன் மருத்துவர் ரிச்சர்டு பேல் சென்னைக்கு பல முறை வந்து சிகிச்சை அளித்தார்.

எய்ம்ஸ் மருத்துவர்களும் சிகிச்சை அளித்தனர், இடையில் சிங்கப்பூர் மருத்துவர்களும் நேரில் வந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.லண்டன் டாக்டர் வழிகாட்டுதலின் பேரில் முதல்வருக்கு எய்ம்ஸ் மற்றும் சிங்கப்பூர் மருத்துவர்கள் சிறப்பான சிகிச்சை அளித்ததன் பேரில் முதல்வர் ஜெயலலிதா சிறப்பாக உடல்நிலை தேறி வருகிறார்.

முதல்வருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் , அவர் உடல் நலம் தேறி வருவது குறித்தும் அப்போலோ மருத்துவமனை 10 வதுஅறிக்கை அனுப்பியது. மேலும் அவர் பேசத்துவங்கி விட்டதாக அறிவித்தது. 

இந்நிலையில் முதல்வர் உடல் நிலை குறித்து அறிய கிறித்துவ பேராயர்கள்  இன்று அப்பலோ வந்தனர். முதல்வர் உடல் நலம் குறித்து கேட்டறிய மயிலை மறைமாவட்ட முன்னாள் பேராயர் சின்னப்பா, கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம் இனிக்கோ இருதயராஜ், ஜாபர்கான் பேட்டை பேராயர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் உள்ளே சென்று உடல் நலம் குறித்து கேட்டறிந்தனர்.

PREV
click me!

Recommended Stories

DMK NDA Alliance : பாஜகவுக்கு ஓகே.. 22 எம்பிக்களுடன் காத்திருக்கும் திமுக.. தமிழக அரசியலில் திடீர் ட்விஸ்ட்.!
TN Politics: வன்னியரசு எனும் நான்.! யார் இந்த திருமாவின் படைத்தளபதி?!