ஒரே ஒரு சீட் கொடுத்ததால் அதிர்ச்சியில் விசுவாசியின் பயங்கர முடிவு!! கவலையில் வைகோ...

By sathish kFirst Published Mar 6, 2019, 10:22 AM IST
Highlights

தி.மு.க. கூட்டணியில் நான்கு லோக்சபா தொகுதிகள் வரை எதிர்பார்த்த ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோவுக்கு ஒன்றை மட்டுமே ஒதுக்கியுள்ளது திமுக. இதில் உடன்பாடு இல்லாததால், அக்கட்சியில் இருந்து விலகுவதாக, சீர்காழி நகர செயலர் அறிவித்துள்ளார்.

தி.மு.க. கூட்டணியில் நான்கு லோக்சபா தொகுதிகள் வரை எதிர்பார்த்த ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோவுக்கு ஒன்றை மட்டுமே ஒதுக்கியுள்ளது திமுக. இதில் உடன்பாடு இல்லாததால், அக்கட்சியில் இருந்து விலகுவதாக, சீர்காழி நகர செயலர் அறிவித்துள்ளார்.

லோக்சபா தேர்தலில், திமுக கூட்டணியில், மதிமுகவிற்கு ஒரு சீட், ராஜ்யசபாவில் ஒரு சீட் ஒதுக்கி நேற்று அறிவிக்கப்பட்டது.இதையடுத்து, நாகை மாவட்டம், சீர்காழி நகர, மதிமுக செயலாளர் பாலு, கட்சியில் இருந்து விலகுவதாக, தன் முகநுால் பக்கத்தில் அறிவித்துள்ளார்.அந்த பதிவில், 'மதிமுகவிற்கு லோக்சபா தேர்தலில் சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டதில், எனக்கு உடன்பாடு இல்லை. 

தளபதி ஸ்டாலின் அவர்களே, அண்ணன் வைகோவை எந்த இடத்திலும் கைவிட மாட்டேன் எனக் கூறிவிட்டு கழுத்தை அறுத்து விட்டீர்களே. மரண வலியுடன் பொதுக்குழுவை, நான் புறக்கணிக்கிறேன். கனத்த இதயத்துடன், ம.தி.மு.க.,வில் இருந்து வெளியேறுகிறேன்' என தெரிவித்துள்ளார்.

இது குறித்து, பாலுவை தொடர்புகொண்ட செய்தியாளர்களிடம் பேசிய அவர்;; 'திமுக, கூட்டணியில், மதிமுகவிற்கு சீட் ஒதுக்கப் பட்டது எனக்கு ஏமாற்றத்தை அளித்தது. அதனால், "பேஸ்புக்"கில் என் கருத்தை பதிவிட்டிருந்தேன். தொடர்ந்து, வைகோ, என்னை தொடர்பு கொண்டு, பொதுக்குழு கூட்டத்திற்கு அழைத்தார். அதை ஏற்று அக்கூட்டத்திற்கு செல்ல இருக்கிறேன் என்றார்.தீவிர விஸ்வாசியில் முடிவால் வைகோ கவலையில் உள்ளதாக சொல்லப்படுகிறது.

மேலும், கம்யூனிஸ்ட்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுக்கு ஆளுக்கு இரண்டு தொகுதிகள் கொடுத்த திமுக தலைமை வைகோ விஷயத்தில் மட்டும் இப்படி நடந்து கொண்டதை மதிமுக நிர்வாகிகள் ஏற்கவில்லை. முஸ்லிம் லீக், கொ.ம.தே.க. - பாரிவேந்தர் கட்சி வரிசையில் மதிமுகவையும் சேர்த்து விட்டதாக வைகோ விஸ்வாசிகள் குமுறுகின்றனர்.

click me!