இவர் ஏன் இப்படி இருக்காரு ? மதிமுகவில் வேறு யாருக்காவது எம்.பி.சீட் வாங்கிக் கொடுக்கலாமே ! கொந்தளிக்கும் தொண்டர்கள் !!

By Selvanayagam PFirst Published Jul 9, 2019, 8:12 AM IST
Highlights

மாநிலங்கனவைத் தேர்தலில், திமுக சார்பில், நான்காவது வேட்பாளராக, வழக்கறிஞர், என்.ஆர்.இளங்கோ மனுத் தாக்கல் செய்த விவகாரம், மதிமுகவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. வைகோவால் எம்.பி.தேர்தலில் நிற்க முடியவில்லை என்றால் அக்கட்சியைச் சேர்ந்த வேறு யாருக்காவது வாய்ப்பு கொடுத்திருக்கலாமே என தொண்டர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்..

தமிழகத்தில் ஆறு மாநிலங்களவை எம்.பி.,க்களுக்கு, அ.தி.மு.க., - தி.மு.க., சார்பில், தலா, இரண்டு பேர்; பா.ம.க., - ம.தி.மு.க., சார்பில், தலா, ஒருவர் என, போட்டியின்றி தேர்ந்தெடுக்கும் விதமாக, வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இம்மனுக்கள் மீது, இன்று பரிசீலனை நடக்கிறது.

இதற்கிடையில், தேசத் துரோக வழக்கில், வைகோவுக்கு, ஓராண்டு சிறைத் தண்டனை கிடைத்ததால், அவரது வேட்புமனு நிராகரிக்கப்படலாம் என்ற சந்தேகம் எழுந்தது. அதனால், முன்னெச்சரிக்கையாக, அவருக்கு பதிலாக, மற்றொரு வேட்பாளரை நிறுத்த, தி.மு.க., திட்டமிட்டது. 

இதுதொடர்பாக, வைகோவும், ஸ்டாலினும் ஆலோசித்தனர். இதையடுத்து, தி.மு.க., சார்பில், மூத்த வழக்கறிஞர், என்.ஆர்.இளங்கோ, நேற்று, நான்காவது வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

வைகோவின் வேட்புமனு ஏற்கப்பட்டால், வரும், 11 ஆம் தேதி  என்.ஆர்.இளங்கோ, தன் வேட்புமனுவை வாபஸ் பெற்று விடுவார். வைகோ வேட்புமனு நிராகரிக்கப்பட்டால், என்.ஆர்.இளங்கோ, ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்வு செய்யப்படுவார். 

ஆனால் வைகோ மனு நிராகரிக்கப்படுமானால், அவரது பதவியை, ம.தி.மு.க.,வில், யாராவது ஒருவருக்கு கிடைக்கும் வகையில், வைகோ செய்திருக்க வேண்டும். ஆனால், தனக்கு மட்டுமே, ராஜ்யசபா எம்.பி., பதவி தருவதற்கு, ஸ்டாலின் சம்மதித்தார் என, வைகோ அளித்த விளக்கம், ம.தி.மு.க.,வினரை கொந்தளிக்கச் செய்துள்ளது.
இது, ம.தி.மு.க.,வுக்கு ஒதுக்கப்பட்ட பதவி தானே; அதை, எப்படி, தி.மு.க.,வுக்கு விட்டு கொடுக்கலாம்' என, வைகோ மீது, அவரது கட்சியினர் ஆத்திரப்படுகின்றனர்.

தனக்கு எம்.பி., பதவி கிடைக்கவில்லை என்றால், தன் கட்சியில், வேறு யாருக்கும் கிடைத்து விடக்கூடாது என்ற, சுயநல மனோபாவம் தான், வைகோவிடம் இருக்கிறதோ தொண்டர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

வைகோ மனு நிராகரிக்கப்பட்டு, இளங்கோ எம்.பி.,யாகும் நிலைமை ஏற்பட்டால், மதிமுகவில் பெரும் குழப்பம் வெடிக்கும் என  அக்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

click me!